TN 2026 X Review: விஜய்யை கலாய்க்கலப்பா.. மாஸ் எலிவேஷன் கொடுத்திருக்காங்களாமா.. செம்ம ட்விஸ்ட்

சென்னை: உமாபதி ராமய்யா இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள படம் தங்க நட்சத்திரம் 2026, அதாவது TN 2026. இந்த படத்தில் நட்டி நடராஜ், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, இந்திரஜா ரோபோ சங்கர், யாஷிகா ஆனந்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று வெளியாகி உள்ளது. படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் பலரும், படம் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை நேரடியாக விமர்சிக்கிறது என்று தெரிவித்தனர்.

ஆனால் படக்குழு தரப்பில் அதை முழுவதுமாக மறுத்தனர். குறிப்பாக நடிகர் விஜய் ஒரு சிங்கம், அவரை நாங்கள் கிண்டல் செய்கிறோம் என்பதே தவறு, மேலும் நட்டி நடித்துள்ள கதாபாத்திரம் அண்டை மாநிலத்தில் ஒருவரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்று எல்லாம் தெரிவித்தனர்.

ஆனாலும் டிரைலரில் இடம் பெற்ற காட்சிகள் விஜய்யை அப்பட்டமாக விமர்சிப்பதாக தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்து வந்தது. விஜய் ரசிகர்கள் சிலர் இந்த படத்தை தேர்தல் வரை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும், அதற்கு இடைக்கால தடையை தேர்தல் ஆணையம் விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதங்கள் எல்லாம் எழுதினர்.

TN 2026 X Review Netizens Troll Vijay but Film Delivers Mass Elevation and Surprising Twists

ரஜினி அட்டாக்: அப்படி இருக்கும்போது, படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறும் கருத்து, படத்தில் விஜய் மட்டுமல்ல, விஜய் உடன் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என பல நட்சத்திரங்களை மறைமுகமாக கலாய்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல், படம் முழுவதும் விஜய்யை அட்டாக் செய்வது போல எல்லாம் இல்லை, மாறாக சில காட்சிகள் விஜய்யின் அரசியல் வருகைக்கு எலிவேஷன் கொடுப்பது போலவும் உள்ளது என்று எல்லாம் பதிவிட்டுள்ளனர்.

பாராட்டு: தங்க நட்சத்திரம் 2026 படம் தமிழ்நாட்டின் அரசியல் களம் மற்றும் தேர்தல் களத்தை பிரதிபலிக்கும் சரியான படமாக இருப்பதாகவும் பலர் பாராட்டி வருகின்றனர். எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டுவதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X