கலைமாமணி விருது.. சிவகார்த்திகேயன், சரோஜா தேவி இன்னும் யாருக்கெல்லாம் கொடுக்கிறாங்க தெரியுமா?

சென்னை: கலைத் துறையில் சிறந்து விழங்கும் நடிகர்களுக்கும் திரைத் துறை சார்ந்த பிரபலங்களுக்கும் ஆண்டு தோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, தேவதர்ஷினி, மதுமிதா உள்ளிட்ட பலருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருதுகள்

கலைமாமணி விருதுகள்

தமிழ்நாட்டின் இயல், இசை மற்றும் நாடக மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும், திரைத்துறை மற்றும் இலக்கியத்தில் சிறந்து விழங்கும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். 1958ம் ஆண்டு முதல் முறையாக நாட்டிய பேரொளி பத்மினிக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரோஜா தேவிக்கு விருது

சரோஜா தேவிக்கு விருது

இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை வென்ற பழம்பெரும் நடிகை சரோஜா தேவிக்கு இந்த ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பழம்பெரும் நடிகையான செளகார் ஜானகிக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி சிவகார்த்திகேயன்

கலைமாமணி சிவகார்த்திகேயன்

கடந்த பிப்ரவரி 17ம் தேதி தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் மார்ச் 26ம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து, அயலான் மற்றும் டான் படங்கள் தயாராகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு

கடந்த ஆண்டு ஒடிடி தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம் திரைப்படத்தில் அரியநாச்சி ரணசிங்கம் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷை தமிழக அரசு இதன் மூலம் கெளரவப்படுத்தி உள்ளது.

கெளதம் மேனன்

கெளதம் மேனன்

இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், நடிகர் ராமராஜன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ஐசரி கணேஷ், ரவிமரியா, இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து உள்ளிட்டோருக்கும் தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

யோகி பாபு

யோகி பாபு

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கும் தமிழக அரசு கலைமாமணி விருதை அறிவித்துள்ளது. கூடிய விரைவிலேயே கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா அரசு சார்பில் கோலாகலமாக நடைபெறும் என்று சமீபத்தில் நடந்த திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்த நிலையில், தற்போது விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபலங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X