த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்.. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்தார். இவரது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுரஜ் என்பவர் மயங்கி விழுந்து மறைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் அளித்து வருகிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “ விஜய்க்கு அனுபவம் இல்லை. அவர் முதலில் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். த்ரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும். தனது குடும்பத்துடன் நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்லபடி கூற வேண்டும். முதலில் அவர் இதிலிருந்து வெளியே வரவேண்டும். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா என்பதுதான் விஜய்க்கு நாங்கள் சொல்லும் பதில். அவர் முதலில் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். ஒரு நல்ல குடும்பஸ்தனாக கட்சியை வழி நடத்த வேண்டும்.

நான் முதலில் விஜய் பற்றி பேசவே விரும்பவில்லை. எனக்கு அவர் எல்லாம் ஒரு ஆளே இல்லை. கூட்டம் வந்தால் போதுமா? அந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? ஓட்டும் வேண்டுமல்லவா?. விஜய்யால் வரும் தேர்தலில் ஒரு சீட் கூட வெல்ல மாட்டார்” என்று தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவரின் இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











