இந்திய நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், சினிமா பிரபலங்கள்
மும்பை : 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.
Recommended Video
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு பிரதமர் மோடி மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய நைட்டிங்கேல்
இந்தியாவின் நைட்டிங்கேல், இந்தியாவின் மெலடி குயின் என்று பல்வேறு பட்டப்பெயர்களால் கொண்டாடப்பட்டு வந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவருக்கு வயது 92. தனது 13வது வயதில் தனது இசைப்பயணத்தை துவங்கிய அவர், 30 ,000க்கும் மேற்பட்ட பாடல்களை இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்கள் துக்கம்
இவரது மறைவையொட்டி இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் இந்தியா முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
கடந்த 80 ஆண்டுகளாக தன்னுடைய மயக்கும் குரலால் பல மொழிகளில் பாடல்கள் பாடி அனைவரையும் அவர் மகிழ்வித்துள்ளதாக அவர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே எம்பி கனிமொழியும் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள் இரங்கல்
இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இயக்குநர் சுசீந்திரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதேபோல பாடகி ஸ்வேதா மோகன், நடிகர் சரத்குமார், மகேஷ்பாபு உள்ளிட்ட தென்னிந்திய சினிமா பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இரங்கல்
நடிகர் மாதவனும் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேபோல இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











