இரவின் நிழல் படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின்.. அற்புதம் என்று பாராட்டு!

சென்னை : நடிகர் மற்றும் பிரபல இயக்குநர் ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்திபனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இரவின் நிழல் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார்.

இரவின் நிழல் படம்

இரவின் நிழல் படம்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருபவர் ஆர் பார்த்திபன். படத்திற்கு படம் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு, சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சர்வதேச கவனம் பெற்ற படம்

சர்வதேச கவனம் பெற்ற படம்

இந்தப் படம் சர்வதேச அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இதுவும் இந்தப் படத்திற்கான சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இந்த முயற்சியை திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

சர்வதேச கவனம் பெற்ற படம்

சர்வதேச கவனம் பெற்ற படம்

இந்தப் படம் சர்வதேச அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இதுவும் இந்தப் படத்திற்கான சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இந்த முயற்சியை திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

இரவின் நிழல் படம்பார்த்த முதல்வர்

இரவின் நிழல் படம்பார்த்த முதல்வர்

இதனிடையே இரவின் நிழல் படத்தை பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை முக ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்தப் படம் குறித்து ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அற்புதம் என்று பாராட்டியுள்ளார்.

வித்தியாசமான பரிசு

வித்தியாசமான பரிசு

இதையடுத்து தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் நடிகர் பார்த்திபனும் முதல்வருக்கு வித்தியாசமான பரிசை வழங்கியுள்ளார். நேற்றைய அரசியல் வரலாறு -2092 என்ற முதல்வரின் சாதனை புத்தகத்தை வடிவமைத்து அவரிடம் வழங்கினார். இதை முதல்வர் ரசித்து பெற்றுக் கொண்டார்.

ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த் பாராட்டு

இரவின் நிழல் படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த ரஜினிகாந்த், பார்த்திபனை தனது போயஸ்கார்டன் இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் படம் குறித்து பேசினர்.

வெற்றிகரமான 4வது வாரம்

வெற்றிகரமான 4வது வாரம்

திரையரங்குகளில் வெளியான இரவின் நிழல் படம் தற்போது 4வது வாரமாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை இந்தப் படம் 7 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. இந்தப் படத்தை ப்ரமோட் செய்யும் வகையில் தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பார்த்திபன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

முதல்வர் பாராட்டு தெம்பளிக்கிறது

முதல்வர் பாராட்டு தெம்பளிக்கிறது

இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலினின் பாராட்டு, தனக்கு மிகுந்த தெம்பை அளித்துள்ளதாக பார்த்திபன் நன்றி கூறி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X