Don't Miss!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- Automobiles
60 லட்சம் கிலோ எடையை இழுத்து கொண்டு அசால்டாக 120 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Technology
Gmail Tips- ஒரே க்ளிக்கில் மொத்த Inbox-ஐ டெலிட் செய்யலாம்!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
‘தாய்க்கிழவி’..வில்லன் டயலாக்கை பாட்டாக்கி இப்படியா பண்ணுவது..தனுஷுக்கு கமல் கட்சி நிர்வாகி கண்டனம்
சென்னை : டைரக்டர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பிரியா பவானிசங்கர், நித்யா மேனன், ராஷி கன்னா, பாரதி ராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தனுஷின் 44 வது படமாக உருவாக்கப்பட்டுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
2019 ம் ஆண்டே சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டாலும் 2021 ம் தேதி ஆகஸ்ட் மாதம் தான் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது. இந்த படம் புதுச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?

தனுஷிற்கு கம்பேக் படமா இருக்குமா
திருச்சிற்றலம்பலம் படத்தின் ஷுட்டிங் வெறும் 50 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. தனுஷின் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன், கிரே மேன் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், திருச்சிற்றம்பலம் படத்தை தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல அவரே மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் தனுஷிற்கு பெரிய கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்கிழவி பாடல்
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் தாய்கிழவி என்ற டைட்டிலில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. தங்கமகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு தனுஷ், அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் என்பதால் ரசிகர்கள் இந்த பாடலை பெரிய அளவில் எதிர்பார்த்தனர்.

தனுஷிற்கு கண்டனம்
திருச்சிற்றலம்பலம் படத்திற்கு பாடல் எழுதியது பாடலாசிரியர் விவேக்காக இருந்தாலும் தாய்கிழவி பாடலை தனுஷே எழுதி, பாடி உள்ளார். இந்த பாடல் இதுவரை 3.6 மில்லியன் பார்வைகளை யூட்யூப்பில் பெற்றுள்ளது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் இந்த பாடலின் வரிகள் பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த பாடலுக்காக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க நிர்வாகியும் மக்கள் நீதிமய்யம் தொழிற்சங்க தலைவருமான சு.ஆ. பொன்னுசாமி திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவறான முன்னுதாரணம்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வயதான உறவுகளை தாத்தா, பாட்டி என மரியாதையோடு முறை சொல்லி அழைத்து மகிழ்ந்த காலம் போய் தற்போது அதனை இந்த தலைமுறை சீரழிக்கும் வகையில் #கிழவி #தாய்க்கிழவி எனும் தரக்குறைவான வரிகளைக் கொண்டு #திருச்சிற்றம்பலம் படத்திற்காக பாடல் எழுதி பாடி தவறான முன்னுதாரணமாகியுள்ள நடிகர் தனுஷ் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அந்த வார்த்தைய தூக்குங்க
வளரும் தலைமுறையினர் மத்தியில் மூத்த வயதான உறவுகளை தவறாக அழைக்கும் எண்ணத்தை விதைக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள அந்த பாடலில் வரும் கிழவி, தாய்க்கிழவி எனும் வரிகளை உடனடியாக நீக்கி விட்டு பாடலை வெளியிட வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் அப்பவே சொன்னாரு
தாய்கிழவி பாடலுக்காக வெளியிடப்பட்ட ப்ரோமோவில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ், அனிருத்திடம் பாட்டு யாரு எழுதினது பொன்னம்பலமா என கேட்பார். இல்லை தனுஷ் என அனிருத் சொன்னதும், அதுக்கு இவரே எழுதி இருக்கலாம் என கலாய்ப்பார் சதீஷ். இந்த டயலாக்கை குறிப்பிட்டு ஏற்கனவே நெட்டிசன்கள் இந்த பாடலை கலாய்த்து வரும் நிலையில், இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இதை சொல்லியும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தனுஷுக்கு நேரம் சரியில்ல போல
தனுஷுக்கு நேரம் சரியில்ல போல. ஒரு பாட்ட எழுதி இப்படியா சிக்குவாரு. எத்தனை வார்த்தை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு வில்லன் டயலாக்கையா வச்சு பாட்டெழுதுவீங்க. கிழவி, தாய்கிழவி வார்த்தைகளை நீக்கனுமா...அப்படி நீக்கனும்னா பாட்டையே தான் நீக்கனும். அந்த வார்த்தைகளை தவிர இந்த பாட்டில் என்ன இருக்கு என கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.