twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி சினிமாவுக்காக மட்டும் குரல் கொடுக்கல... ஜிஎஸ்டி பற்றி புரியாதவர்களுக்காவும் தான்!

    By Shankar
    |

    லட்சோபலட்சம் சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வுப் பிரச்சனையாகி விடக்கூடாது என்று கேளிக்கை வரியை விலக்குமாறு தமிழக அரசிடம் ரஜினி கோரிக்கை விடுத்திருந்தார்.

    அதைப் பார்த்தவர்கள் ரஜினி சினிமாக்காரங்களுக்காக மட்டும் பேசுறாரு. தமிழ் நாட்டு அரசை மட்டும் கேக்குறாரு. மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் இல்லை என்று ஆளுக்கொரு கருத்தை திணிக்கிறார்கள்.

    TN Government is imposing indirect tax on cinemas

    ஒன்று மட்டும் புரிகிறது. இப்படி ரஜினியை குறை சொல்பவர்கள் யாருக்கும் ஜிஎஸ்டி என்றால் என்ன? அது ஏன் எப்படி அமல்படுத்தப்பட்டது என்ற விவரங்கள் கொஞ்சம் கூட தெரியவில்லை.

    ஒரே நாடு ஒரே வரி என்பதுதான் ஜிஎஸ்டி. அப்படியென்றால் இதற்கு முன்னால் என்னென்ன வரிகள் இருந்தன. யார் யார் அதை வசூலித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?.

    மத்திய மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்கள் 'வரி விதிப்பு' தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது என நம்புவோம். தனி நபர் மற்றும் நிறுவனங்கள் மீது மத்திய அரசு நேரடியாக வருமான வரி விதிக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    பொருட்கள் மற்றும் சேவை மீது உற்பத்தி வரி, விற்பனை வரி, நுழைவு வரி, சுங்க வரி இன்னும் சில உள்ளூர் வரிகளும் மத்திய மாநில அரசுகள் விதித்து வந்தன. மாநில அரசின் வரிகள் மாநிலம் தோறும் மாறுபடும். பொருட்களின் சந்தை விலையும் அதற்கேற்ப மாறுபடும். இதைச் சரி செய்யவும் வரி வசூலிப்பை சீரமைக்கவும் உருவான திட்டம்தான் ஜிஎஸ்டி.

    அதாவது ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மற்ற எந்த வரிகளும் சேவை அல்லது பொருட்கள் விற்பனை மீது விதிக்ககூடாது என்பது தான் முக்கிய அம்சமாகும்.. மாநிலங்கள் அவ்வாறு விதித்தால் ஜிஎஸ்டி க்கு எதிரானது. சினிமா தியேட்டரில் விற்கும் டிக்கெட் மீதான வரி என்ன? அது சேவை வரியா அல்லது விற்பனை வரியா என்ற கேள்வி முதலில் எழுகிறது.

    டிக்கெட் விலை மீதான வரி 'கேளிக்கை வரி' என்று அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி திட்டத்தின் படி மாநில அரசுகள் எந்த வரியும் தன்னிச்சையாக விதிக்கக் கூடாது. இது வரையிலும் கேளிக்கை வரியை மாநில அரசு விதித்து வந்தால் அதை கட்டாயம் நீக்க வேண்டும்.. அதற்குப் பதிலாகத்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது.

    தமிழக அரசிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு சார்பில் மாநில அரசு வசூலித்தாலும் அந்த வரியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி விட்டோம். இனி கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் தான் வசூலிக்கும் என்ற பதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டது.

    உள்ளாட்சிகளுக்கு நில வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவைகளை வசூலிக்கும் அதிகாரம் உள்ளது. தவிர தொழில் நிறுவனங்கள் மீது தொழில் வரியும் விதிக்கலாம். உள்ளாட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டுமே உரிமை உண்டு. ஜிஎஸ்டியால் இதில் எந்த மாறுதலும் இல்லை. தமிழக அரசு தற்போது கேளிக்கை வரியை உள்ளாட்சிகளுக்கு மாற்றி இரட்டை வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    ஆனால் சட்டப்படி உள்ளாட்சிகளுக்கு அதன் எல்லைக்குட்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு உள்ளே நடைபெறும் வணிகம்/வியாபாரம் மீது வரி விதிக்க உரிமை இல்லை.

    தற்காலிகமாக நடைபெறும் கேளிக்கைகளுக்கு, அது நடைபெறும் நிலத்திற்கான வரி மற்றும் கேளிக்கை வரி வசுலிக்கும் உரிமை உள்ளாட்சிக்களுக்கு உள்ளது.. அதாவது ஒரு தனி நிகழ்ச்சி , கச்சேரி, நாடகம், பொருட்காட்சி, சர்க்கஸ் என எப்போதாவது நடக்கும் நிகழ்ச்சிக்கு கேளிக்கை வரி வசூலிக்கலாம். தியேட்டர்கள் நிரந்தரமான கட்டிடத்தில் இயங்குகின்றன. அதற்கு சொத்துவரி, தண்ணீர்வரி, தொழில் வரி விதிக்காலாமே ஒழிய சினிமா டிக்கெட் மீது வரி வசூலிக்க உரிமை இல்லை.

    ஆனால் தமிழக அரசு கேளிக்கை வரியை உள்ளாட்சிகள் மூலம் வசூலிக்கப்போவதாக மத்திய அரசிடம் கூறியுள்ளது. ஜிஎஸ்டி திட்டப்படி இது முரணானது. மாநில வரிகளை நீக்கி விட்டு ஒரே வரி என்பது தான் ஜிஎஸ்டி.

    சினிமா விவகாரத்தில் மாநில அரசு ஏற்கனவே வசூலித்து வந்த கேளிக்கை வரியை மாற்று ஏற்பாடு மூலம் வசூலிக்க முன் வந்துள்ளது. இது ஜிஎஸ்டிக்கு எதிரான ஏமாற்று வேலை. அண்டை மாநிலங்களில் சினிமாவுக்கு முன்பு இருந்த கேளிக்கை வரி நீக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஜிஎஸ்டியின் படி குறிப்பிட்ட சதவீத வரியும், கூடுதலாக மாநில அரசின் சார்பில் உள்ளாட்சிகளின் மூலம் கேளிக்கை வரியும் தியேட்டர்களில் வசூலிக்கிறார்கள்.. அதனால் தான் 30 சதவீதத்திற்கும் மேல் சினிமா டிக்கெட்டில் வரி வசூலிக்கப்படுகிறது. இது ஜிஎஸ்டி திட்டத்தை ஏமாற்றும் தமிழக அரசின் மோசடியாகும்..

    அதனால் தான், ரஜினி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வரிவிலக்கு கேட்டுள்ளார். சினிமாத் தொழிலுக்கு ஒட்டு மொத்தமாக ஜிஎஸ்டியை நீக்குங்கள் என்று கேட்டால் அபத்தமாகிவிடும். அந்த கோரிக்கையில் நியாயமும் இருக்காது. ஆனால் மாநில அரசின் மோசடியை தடுக்க, தமிழக அரசுக்கு நியாயமான கோரிக்கை விடுத்துள்ளார்.

    அவர் இன்னும் கடுமையாக மாநில அரசை நேரடியாகவே விமர்சித்து இந்த மோசடிக் குட்டை உடைத்திருக்கலாம். அவர் அப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர் அல்ல, அவர். மேலும் அமைதி முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காகவே மென்மையான கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரிகிறது. ஜிஎஸ்டி திட்டத்திற்கு புறம்பாக, தமிழக மக்கள் மீது தமிழக அரசு சுமத்தியுள்ள கூடுதல் வரியைத் தான் நீக்கக் கேட்டுள்ளார்.

    இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், இதுவரையிலும் வசூலித்த கேளிக்கை வரிப்பணத்தை உள்ளாட்சிகளுக்கு கொடுத்து விட்டோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. உண்மையிலேயே அந்த பணம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் வெளிப்படையாக தெரியவில்லை. கொடுக்கப்பட வில்லை என்றால் ஜிஎஸ்டி திட்டத்தில் மத்திய அரசையே ஏமாற்றிய மிகப்பெரிய மோசடியாகும். கேளிக்கை வரிப் பணம் வராத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள், தமிழக அரசின் மீது வழக்கும் தொடரலாம்.

    - கரிசல் பிரபு

    English summary
    Tamil Nadu government is imposing entertainment tax thru local bodies. Till now entertainment tax was collected by state government. As part of GST scheme, state government is not allowed to impose additional tax to GST. However TN government has declared that entertainment tax was paid to local bodies and will be collected by them here after. Local bodies are exempted for few taxes from GST. TN government is playing a game by passing on the entertainment tax to local bodies, leading to double taxation against GST norms. People who are condemning Rajini should know these facts first. Rajini has asked the right question to the right government which is cheating its own people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X