இ.பி.எஸ். அரசு கொடுத்த 1000 ரூபாய் பேட்ட, விஸ்வாசம் பார்க்கவா? #Petta #Viswasam
சென்னை: தமிழக அரசு பொங்கல் பரிசுடன் கொடுத்த ஆயிரம் ரூபாய் பேட்ட, விஸ்வாசம் படம் பார்க்கவா?
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு, ரூ.1,000 கூடிய பரிசு தொகுப்பு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுத்து வருகிறது.

அந்த ஆயிரம் ரூபாய் குறித்து கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆயிரம் ரூபாய் கொடுப்பது சரியா?
ஒரு கணவனும் மனைவியும் என் வீட்டருகே மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள ரேஷன் கடைக்குப் போய், ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து,
" பேட்ட, விஸ்வாசத்துக்கு ஆச்சு " என்று சொன்னதைத்தான் என்னால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











