பொன்னியின் செல்வன் படம் பார்த்த தமிழக ஆளுநர்... பூங்கொத்து கொடுத்து வரவேற்பு!

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி இரண்டாவது வாரத்தை எட்டி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்து வருகிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் காவியத்திற்கு திரையில் உயிர் கொடுத்துள்ளார் மணிரத்னம். தன்னுடைய சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் கல்கியின் படைப்பிற்கு சிறப்பான வகையில் வடிவம் கொடுத்துள்ளார். கதையை படித்தவர்கள், பாடிக்காதவர்கள் என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்துள்ளது.

நட்சத்திர பட்டாளம்

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விக்ரம் பிரபு, பிரபு, நாசர், சரத்குமார், பார்த்திபன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பான் இந்திய படமாக

பான் இந்திய படமாக

பான் இந்தியா முறையில் தமிழ்,தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் படம் வெளியானது. இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. படம் முதல் வாரம் மட்டும் ரூ.308.59 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தில் 400 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

ரூ 500 கோடியை தாண்டும்

ரூ 500 கோடியை தாண்டும்

தீபாவளி வரை வேறு எந்த படங்களும் வெளியாகததால் இந்தப் படத்தின் வசூல் ரூ 500 கோடியைத் தாண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்கான அவரையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் முழுவீச்சில் உள்ளனர்.

படம் பார்த்த ஆளுநர்

படம் பார்த்த ஆளுநர்

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேளச்சேரியில் உள்ள பிரபல திரையரங்கான ஐ மேக்ஸ் தியேட்டரில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்தார். அவரை அந்த திரையரங்கத்தின் சி.இ.ஓ விவேக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X