twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு 2 வாரம் தடை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - கமல் அதிர்ச்சி

    By Sudha
    |

    சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களு் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குமுறல் வெளியிட்டுள்ளனர்.

    திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    மீலாடி நபியன்று ரிலீஸுக்குத் திட்டம்

    மீலாடி நபியன்று ரிலீஸுக்குத் திட்டம்

    விஸ்வரூபம் படத்தை மிலாடி நபி தினமான நாளை கமல்ஹாசன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.இதுதான் இஸ்லாமியர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கி விட்டது.

    பெரும் போராட்டத்துக்கு முஸ்லீம்கள் திட்டம்

    பெரும் போராட்டத்துக்கு முஸ்லீம்கள் திட்டம்

    இதையடுத்து அவசர கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. படத்தை வெளியிட விடாமல் தடுப்போம் என்றும் இவை சூளுரைத்தன.

    கமிஷனர் அலுவலகம் விரைந்த சந்திரஹாசன்

    கமிஷனர் அலுவலகம் விரைந்த சந்திரஹாசன்

    இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு கமிஷனர் ஜார்ஜ் இல்லை. இதையடுத்து சில உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கிளம்பிச் சென்றார்.

    கோவை கலெக்டரின் திடீர் அறிக்கை

    கோவை கலெக்டரின் திடீர் அறிக்கை

    இந்த நிலையில்தான் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபாலுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் கோவை மாவட்டம் பதட்டமான பகுதியாகும்.இங்கு தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் விஸ்வரூபம் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும். எனவே அப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

    மாவட்ட எஸ்.பிக்களும் கவலை

    மாவட்ட எஸ்.பிக்களும் கவலை

    அதேபோல பல்வேறு மாவட்ட எஸ்.பிக்களும் படத்தைத் திரையிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று உள்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

    2 வாரங்களுக்குத் தடை

    2 வாரங்களுக்குத் தடை

    இதையடுத்து நேற்று உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அதிரடியாக படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் போராட்டங்கள், பிரச்சினைகள் வெடிப்பதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை தேவைப்படும் இடங்களில் பிறப்பிக்கவும் அவர் மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.

    கமல் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம்கள்

    கமல் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம்கள்

    இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

    பெரும் கவலையில் கமல் - ஜெ.வை சந்திப்பாரா?

    பெரும் கவலையில் கமல் - ஜெ.வை சந்திப்பாரா?

    டிடிஎச் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி விஸ்வரூபம் படம் ஜனவரி 25ம் தேதி, அதாவது நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது தமிழக அரசு அதற்குத் தடை விதித்திருப்பது கமல்ஹாசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவையும், உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரை சந்தித்து அவர் விளக்கமளிக்க முயலலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    TN govt has banned the screening of Kamal Hassan's Viswaroopam for 2 weeks citing law and order issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X