twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் போட்ட ஆர்டிஐ அஸ்திரம்... அங்குசம் படத்துக்கு உடனே வரி விலக்கு!

    By Shankar
    |

    சென்னை: தன் படத்துக்கு வரிவிலக்கு தர லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய மனுகண்ணனின் அங்குசம் படத்துக்கு தமிழக அரசு உடனடியாக வரிவிலக்க அளித்துள்ளது.

    லஞ்சத்துக்கு எதிராகவும், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் மனுகண்ணன் என்பவர் அங்குசம் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

    Angusam

    (அங்குசம்)

    இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் தந்ததைத் தொடர்ந்து தமிழக அரசின் வரிச் சலுகைக்காக விண்ணப்பித்தார்.

    ஆனால் சலுகையைப் பெற அமைச்சரின் பிஏ லஞ்சம் கேட்டதோடு, இதில் முதல்வருக்கும் பங்கிருப்பதாகவும் கூறியதாக மனுகண்ணன் குற்றம் சாட்டி நக்கீரன் இதழில் பேட்டி கொடுத்திருந்தார். அதை பிரஸ் ரிலீசாகவும் தன் பிஆர்ஓ மூலம் அனுப்பியிருந்தார்.

    இத்தோடு நில்லாமல், தன் படத்துக்கு வரி விலக்கு அளிக்காதது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கம் கேட்டிருந்தார்.

    TN govt grants tax exemption to Angusam

    இந்த நிலையில் படத்துக்கு நேற்று வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

    மேலும் லஞ்சமெல்லாம் கேட்கவில்லை என்று அமைச்சர் தரப்பில் மறுப்பும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The TN govt has granted tax exemption to Angusam movie after director Manukannan's allegation on Commercial tax minister Ramana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X