அண்டார்டிகா ஆய்வுக்கு புதிய இந்திய கப்பல்
சென்னை: பல்நோக்கு அறிவியல் கப்பலான சாகர்நிதியை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அண்டார்க்டிக் மற்றும் ஆர்க்டிக் பிரதேசங்களில் இந்தியா மேற்கொள்ளவுள்ள ஆய்வுத் திட்டங்களுக்கு இந்தக் கப்பல் பேருதவியாக இருக்கும்.
இந்தக் கப்பலில் மொத்தம் 40 விஞ்ஞானிகள் இருப்பார்கள். 100 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 5 மீட்டர் ஆழம் கொண்டதாக இந்த கப்பல் இருக்கும். மணிக்கு 10 முதல் 20 கடல் மைல்கள் தொலைவுக்கு இக்கப்பல் செல்லும்.
ஆழ் கடல் அகழ்வுப் பணிகள், கடலியல் ஆய்வுகள், கடலியல் தொழில்நுட்பப் பணிகள் உள்ளிட்டவற்றில் இந்தக் கப்பல் விஞ்ஞானிகளுக்கு உதவும்.
ரிமோட் கன்ட்ரோல் கருவிகள், ஹைட்ராலிக் லிப்டுகள், 10 டன் எடை கொண்ட கிரேன்கள் உள்ளிட்ட பல்வேறு அதி நவீன வசதிகள் இந்தக் கப்பலில் இடம் பெற்றுள்ளது.
இதுதவிர ஹெலிபேட், அறிவியல் வேன்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











