twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கருத்து கந்தசாமி ஆர்.ஜே. பாலாஜி மீது கொலவெறியில் மக்கள்

    By Siva
    |

    Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்!- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது மாணவி உள்பட 12 பேர் பலியாகினர்.

    இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியின் கருத்து மக்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

    ஆர்.ஜே. பாலாஜி

    தூத்துக்குடியில் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாவி மக்களை போலீசார் சுட்டுக் கொன்றது வெட்கக்கேடு. நம் சொந்தங்கள் பலியாகியுள்ளனர். கலகக்காரர்களால் அமைதியான போராட்டம் வன்முறையில் முடிந்ததை பார்க்க வருத்தமாக உள்ளது. கடவுளே தூத்துக்குடி மற்றும் தமிழகம் மீது கூடுதல் அன்போடு இருப்பாயாக என்று ஆர்.ஜே. பாலாஜி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.

    கோபம்

    ஆர்.ஜே. பாலாஜியின் ட்வீட்டை பார்த்து மக்கள் கோபம் அடைந்துள்ளனர். அதென்ன ஆ, ஊன்னா கலகக்காரர்கள் நுழைந்துவிட்டார்கள் என்று கூறுகிறீர்கள் என்று பாலாஜியை வறுத்தெடுத்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டு

    மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின்போதும் கலகக்காரர்கள் நுழைந்துவிட்டதாக தெரிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்நிலையிலே மீண்டும் அதையே கூறியுள்ள அவரை மக்கள் விளாசுகிறார்கள்.

    நியாயம்

    துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் என்று கூறி அதை நியாயப்படுத்த வந்துவிட்டார் பாலாஜி என்று திட்டுகிறார்கள்.

    கோபம்

    ஆர்.ஜே. பாலாஜியின் கருத்தால் தமிழக மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

    அதிகாரம் படைத்தவர்கள்

    வெட்கப்படுங்கள். அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசும், அதிகாரம் படைத்தவர்களும் தான் நீங்கள் கூறிய கலகக்காரர்கள் என்று ஒருவர் விமர்சித்துள்ளார்.

    English summary
    People of Tamil Nadu are irked by RJ Balaji's comment over Sterlite protest in Tuticorin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X