ரஜினி, கமல் அரசியல்: சத்யராஜுக்கு பார்த்திபன் குண்டக்க மண்டக்க பதில்

By Siva

Recommended Video

ரஜினி, கமலை நம்பலாம் - பார்த்திபன்

சென்னை: பிரபல நடிகர்களுக்கு அனைத்தும் தெரியும் என நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ள நிலையில் பார்த்திபனோ ரஜினி, கமலை நம்பலாம் என்கிறார்.

நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும். பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று மட்டும் நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் ரஜினி, கமலை பற்றி தான் அப்படி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கமல்

கமல்

ரஜினியும், கமலும் சந்தித்து பேசியுள்ளது அவர்களின் ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. அவர்களை சினிமாக்காரர்கள் தானே என்று யாரும் ஒதுக்கிவிடக் கூடாது.

மக்கள்

மக்கள்

ரஜினி, கமல் நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்துள்ள பணம் எல்லாம் மக்கள் கொடுத்தது. அந்த பணத்தை மக்களுக்கு நல்லது செய்ய பயன்டுத்த விரும்புகிறார்கள்.

ஓட்டு

ஓட்டு

ரஜினி, கமலை நம்பலாம். அதற்காக அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தேர்தல் வரும் நேரத்தில் தான் யாருக்கு என் ஆதரவு என்பதை தெரிவிப்பேன்.

காவிரி

காவிரி

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரின் அளவை குறைத்துவிட்டனர். மனிதாபிமானத்தோடு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுங்கள் என்று கர்நாடகாவை மன்றாடுகிறேன். தமிழக மக்கள் உங்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் என்றார் பார்த்திபன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X