TN State Film Awards: பேரனோடு விருது வாங்கிய ரோபோ சங்கரின் மனைவி.. செம எமோஷனல் மொமண்ட்!
சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து திரைத்துறை கலைஞர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு மாநில விருதுகள் வழங்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டு வரை வெளியான தமிழ் படங்களுக்கு விருது அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு நேற்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி விருது அளித்து கௌரவித்தது.
இதில் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகளில் அவருக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார் என்பதால், அவருக்கான விருதை அவரது மனைவி பிரியங்கா வாங்கச் சென்றார். அப்போது அவர் தனது பேரன் நட்சத்திரனை தூக்கிக் கொண்டு மேடை ஏறினார். மெடல் அணிவித்து விருது கொடுத்து கௌரவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தனது பேரன் கழுத்தில் மெடலை அணிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அவரது இந்த கோரிக்கையை கேட்டதும், கொஞ்சம் கூட தாமதிக்காமல் ரோபோ சங்கரின் பேரன் நட்சத்திரன் கழுத்தில் மெடலை அணிவித்து விருது வழங்கி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயனோ, நீங்கள் மண்ணை விட்டு மறைந்தாலும், உங்கள் புகழ் இந்த மண்ணை விட்டு மறையாது ரோபோ அண்ணா என்று எமோஷனலாக கமெண்ட் போட்டுள்ளார். அதேபோல் ரசிகர்கள் பலரும் இதயங்களை வாரி வழங்கி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் மிகவும் எமோஷனலாகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











