லியோ லிப் லாக் சீனும்.. விஜய் - சங்கீதா விவாகரத்து சண்டையும்.. அப்படியே TN2026ல குசும்புதான்!

சென்னை: தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்து வெளியான TN2026 திரைப்படம் 3 நாட்களில் அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதற்கு முன்னதாக நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான கம்பி கட்ன கதை உள்ளிட்ட படங்கள் 30 முதல் 40 லட்சம் வசூலை கூட தாண்டவில்லை.

ஆனால், இந்த படத்தில் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை நய்யாண்டி செய்து படம் உருவாக்கப்பட்ட நிலையில், படத்தில் என்ன இருக்கிறது என்பதை விஜய் ஹேட்டர்களும், ரசிகர்களும் கொஞ்சம் பார்த்ததில் இருந்து 1.5 கோடி வசூலை 3 நாட்களில் கடந்துள்ளது.

TN2026 Movie Contains Kashmir shooting and Lip Lock scene with Actress directly attacks Vijay

படத்தில் வரும் பல விசயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விஜய்யை அட்டாக் செய்யும் விதமாகவே உள்ளது என்கின்றனர். சில இடங்களில் மட்டும் விஜய்க்கு மாஸ் பில்டப் கொடுத்துவிட்டு, குறிப்பாக பர்சனல் மேட்டரில் அதிகப்படியாக அசிங்கப்படுத்தியுள்ளதாக சர்ச்சைகள் வெடித்துள்ளன.

விஜய் ஒரு சிங்கம்: ஆனால், படத்துக்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே அவசர அவசரமாக பிரஸ் மீட் எல்லாம் வைத்து அப்பாவும் மகனும் விஜய் ஒரு சிங்கம், அவர் ஒரு பெரிய ஆளுமை அவரை அசிங்கப்படுத்தவில்லை என்றெல்லாம் பேசினர். ஆனால், படத்தை வெளியிடாமல் தடுக்க விஜய் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், வரட்டும் பார்த்துக்கலாம் என்றே விட்டுவிட்டார் என்கின்றனர். ஏற்கனவே பல முனைகளில் இருந்து தாக்குதல் வருவதை சந்தித்து வரும் விஜய் இதையும் சமாளித்து விடலாம் என விட்டு விட்டார் என்கின்றனர்.

காஷ்மீர் ஷூட்டிங், லிப் லாக் சீன்: ஸ்க்ரிப்ட் படிக்கும் போது காரைக்குடியில் ஷூட்டிங் என இருந்தது எப்படி காஷ்மீருக்கு மாறியது என நட்டி நட்ராஜின் மனைவி கேட்பது போலவும், நடிகையுடன் லிப் லாக் சீன் வேற கேக்குதோ என அவர் கணவரிடம் சண்டையிடும் காட்சியை அப்படியே வைத்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டது என்பதும் மேலும், அந்த படத்தில் விஜய் - த்ரிஷா இடையே லிப் லாக் காட்சி இடம்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதைத்தான் அப்படியே வைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர் என அந்த காட்சியின் தியேட்டர் க்ளிப்பிங்க்ஸை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். விஜய் மற்றும் த்ரிஷா பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடித்தது லியோ படத்தில் தான். அதன் பின்னர் தான் அவரது குடும்பத்தில் விவாகரத்து பஞ்சாயத்து ஏற்பட்டது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X