நடிகையாக வேண்டும் என்ற வெறியால் என்னையே பலருக்கு விருந்தாக்கினேன்.. சொல்கிறார் ஸ்ரீரெட்டி!
நடிகை ஆக வேண்டும் என்ற வெறியால் என்னையே நான் பலருக்கு விருந்தாக்கினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஆக வேண்டும் என்ற வெறியால் என்னையே நான் பலருக்கு விருந்தாக்கினேன் என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் தன்னை பாலியல் உறவுக்காக பயன்படுத்தியதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதைத்தொடர்ந்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய ஸ்ரீரெட்டி தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தமிழ் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களும் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார்.

வரிசைக்கட்டி
இந்நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள ஸ்ரீரெட்டியை பேட்டிக்காண முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள், யூட்யூப் சேனல்கள் என அனைத்து செய்தி நிறுவனங்களும் வரிசைக்கட்டி நிற்கின்றன.

என்னையே இழந்தேன்
இந்நிலையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ரீரெட்டி சினிமா வாய்ப்பு தருவார்கள் என்று எண்ணிய பலரிடம் தன்னை இழந்ததாக கூறியுள்ளார்.

வெறி
நடிகர்களும் இயக்குனர்களும் படுக்கைக்கு வருமாறு அழைத்த போது ஏன் நீங்கள் தவிர்க்கவில்லை? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீரெட்டி, நடிகை ஆக வேண்டும் என்ற வெறியே அதற்கு காரணம் என்றார்.

மானம் முக்கியமல்ல
படுக்கையை பகிர்ந்து கொண்டால் தான் பிரபல நடிகை ஆக முடியும் என கூறப்பட்டது. மானத்தை விட நடிகையாக வேண்டும் என்பதே முக்கியம் என்று எனக்கு தோன்றியது.

விருந்தாக்கினேன்
எப்படியாவது நடிகையாக வேண்டும் என்று என்னையே பலருக்கும் விருந்தாக்கினேன். மேலும் ஒவ்வொருவரும் வாய்ப்பு தருவார்கள் தருவார்கள் என்று நம்பியே என்னை நான் இழந்து கொண்டிருந்தேன். இவ்வாறு நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











