ரஜினிக்கு BMW.. நெல்சனுக்கு PORSCHE கார் பரிசு.. மகிழ்ச்சியில் கலாநிதி மாறன்.. வாரி வழங்கிய பரிசு!

சென்னை: ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது.

இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

To celebrate the grand success of Jailer, Kalanithi Maran presents the key of a brand new Porsche car to Nelson

ஜெயிலர் புதிய சாதனை: ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளியான காவாலா பாடல் சக்கை போடு போட்டு இன்ஸ்டாவில் பிரபலங்களை ஆட்டம் போட வைத்தது. இதையடுத்து வெளியான ஹூக்கும் பாடல், ரஜினி ரசிகர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிட்டு புதிய சாதனை படைத்தது.

அது மட்டுமில்லாமல் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில், நான் தான் சூப்பர் ஸ்டாரு என்று சொல்லாமல் சொல்லி சம்பவத்தை சத்தமே இல்லாமல் செய்த ரஜினியை திரையில் காண ரசிகர்கள் அதே வைப்போடு காத்திருந்தனர். திரையரங்கில் வெளியான இப்படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றது.

525 கோடி வசூல்: இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடியை வசூல் செய்தது. இதையடுத்து, இரண்டாம் வார முடிவில் படம் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் நெல்சன், படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆக வேண்டும் என்று நினைத்து இயக்கவில்லை. படம் நன்றாக வர வேண்டும் என நினைத்து எடுத்தோம். படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினியின் திரை ஆளுமை தான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ரஜினிக்கு BMW X7 கார்: ஜெயிலர் படம் வெற்றி வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். BMW X7 மாடல் காரின் விலை ரூ.1.25 கோடியாகும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய போர்ஷே கார்: இந்நிலையில், ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இயக்குநர் நெல்சன் திலிப்குமாரை நேரில் சந்தித்து காசோலையை கொடுத்த கலாநிதி மாறன், நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக கொடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X