Kalanidhi Maran: ரஜினியை தொடர்ந்து இயக்குநர்.. நெல்சனுக்கும் செக் கொடுத்த கலாநிதி மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படத்தின் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் தற்போது 600 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படம் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு மிகவும் உற்சாகமடைந்துள்ளது.

ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கும் செக் கொடுத்த கலாநிதி மாறன்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியிருந்த ஜெயிலர் படம் கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான இந்தப்படத்தின் வசூல் ஆரம்பத்தில் இருந்தே மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.
தற்போது மூன்றாவது வாரத்திலும் திரையரங்குகளில் மிகவும் சிறப்பாக ஓடி வருகிறது ஜெயிலர். இந்தப் படத்தில் தெலுங்கு உள்ளிட்ட ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்களை சேர்த்திருந்தார் நெல்சன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என அந்தந்த மொழி ரசிகர்களை கவரும்வகையில் முன்னணி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர். மேலும் வசந்த் ரவி, மிர்ணா என படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் தங்களுடைய ரோல்களை சிறப்பாக்கியிருந்தனர்.
தன்னுடைய மகன் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க களமிறங்குகிறார் முன்னாள் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன். இந்த நடவடிக்கையில் அவருக்கு உறுதுணையாக சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்றவர்கள் செயல்படுவதும், தன்னுடைய மகன் குறித்த உண்மை தெரியவரும் ரஜினிகாந்த்தின் முடிவு என்ன என்பதையும் மிகவும் சுவாரஸ்யமாக பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையுடன் படத்தில் கொடுத்திருந்தார் நெல்சன்.
ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தையும் தயாரித்திருந்தது. இதேபோல இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படமான விஜய்யின் பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. அண்ணாத்த மற்றும் பீஸ்ட் படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன. இந்நிலையில், ஜெயிலர் படம் அனைத்து விஷயங்களிலும் முழுமையான படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் நடிகர் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் காசோலையை கொடுத்துள்ளார். இந்தப் படத்தி வசூலில் அவருக்கு பங்களிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஜினிக்கு பிஎம்டபள்யூ காரையும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். இதையடுத்து படத்தின் நாயகன் ரஜினிக்கு பரிசளித்துள்ள தயாரிப்பு தரப்பு இயக்குநருக்கு எதையும் கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இதற்கும் சன் பிக்சர்ஸ் தற்போது பதிலளித்துள்ளது. படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் தற்போது நெல்சனுக்கும் பாராட்டு தெரிவித்து காசோலை வழங்கியுள்ளார் கலாநிதி மாறன். இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. முன்னதாக ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து காசோலையும் பிஎம்டபள்யூ காரும் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நெல்சனுக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அவருக்கும் கார் பரிசாக வழங்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











