மழை நாயகி ஸ்ரேயா சரணுக்கு இன்று பிறந்தநாள்... இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தனது தனித்துவமான நடிப்பின் மூலமும் கிறங்க வைக்கும் கவர்ச்சி மூலமும் ரசிக்க வைத்து வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.

ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு என வெற்றி வலம் வந்த இவர் இப்பொழுது எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்ரேயா சரண், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று இவர் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் மற்றும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

முன்னணி நடிகையாக

முன்னணி நடிகையாக

சிரித்த முகத்துடன் சிறுத்த இடையுடன் பல கோடி ரசிகர்களை தன் கைவசம் வைத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரேயா சரண் ரஜினிகாந்த், விஜய், சஞ்சீவி என பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.

சிறப்புத் தோற்றத்தில்

சிறப்புத் தோற்றத்தில்

தெலுங்கில் வெளியான "இஸ்டம்" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழில் "எனக்கு 20 உனக்கு 18" என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.

வெற்றியும் பெற்று

வெற்றியும் பெற்று

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "மழை " திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக தனது காலடி பதித்த ஸ்ரேயா சரண் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் மழை இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்ததோடு வெற்றியும் பெற்று பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

அடுத்தடுத்த வாய்ப்புகள்

அடுத்தடுத்த வாய்ப்புகள்

மழை திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பலராலும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவான பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து கோலிவுட்டையும் தன்வசப்படுத்தினார்.

நடிப்பதை குறைத்து

நடிப்பதை குறைத்து

இவ்வாறு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, தனது கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சண்டக்காரி

சண்டக்காரி

அவ்வாறு இவர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வரும் அதேசமயம் தமிழில் இவரது நடிப்பில் உருவான "சண்டக்காரி" மற்றும் " நரகாசுரன்" போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

கவர்ச்சி புகைப்படங்கள்

கவர்ச்சி புகைப்படங்கள்

சமீப காலமாக திரைப்படங்களில் மிகக்குறைவாகவே தோன்றி வந்தாலும் தனது ரசிகர்களை என்றும் மறவாத ஸ்ரேயா சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து குஷிப்படுத்தி வருகிறார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட குட்டி குட்டி க்யூட்டான வீடியோக்கள் மற்றும் வித்தியாசமாகவும் அதேசமயம் வியக்க வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் என அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் செப்டம்பர் 11 ஆம் தேதியான இன்று தனது 38 வது பிறந்தநாளை கணவருடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி மகிழ்வித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்தப்பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.

பல மொழியில்

பல மொழியில்

இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் "கமனம்" படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக "கமனம்" படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.

இன்று வெளியீடு

இன்று வெளியீடு

நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் "கமனம்" படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞான சேகர் V.S இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். கமனம் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X