ஹாண்ட்சம் ஹீரோ ஆன்சன் பாலுக்கு இன்று பிறந்த நாள்..ரசிகைகள் வாழ்த்து !
சென்னை : மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்டு வெற்றிகரமாக வலம் வருபவர் நடிகர் ஆன்சன் பால்.
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசமான கெட்டப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இப்போது தமிழிலும் பல படங்கள் நடித்து வருகிறார்.
இவ்வாறு பெண்களால் அதிகம் ரசிக்கப்படும் ஆணழகனாகவும், நடிப்பில் மிரட்டி வரும் அசராத சூரணாகவும் வலம்வரும் ஆன்சன் பால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அயராத முயற்சியின்
நாளுக்கு நாள் திரைப்படங்களில் இளம் நாயகர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில், அதில் நாயகிகளின் வருகை மிக அதிகமாகவே இருக்கின்றது. எனினும் தங்களது அயராத முயற்சியின் மூலம் தங்களுக்கான இடங்களைப் பெற்று பல நல்ல திரைப்படங்களில் நடித்து பெயர் பெறும் நடிகர்களில் தற்பொழுது அனைவராலும் கவனிக்கப்பட கூடியவர் நடிகர் ஆன்சன் பால்.

ஆர்யா நடிக்க
மலையாளத்தில் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் வளர்ந்து வரும் நாயகனான ஆன்சன் பால் "கேக்யூ" என்ற படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். இந்த கேக்யூ திரைப்படம் முதலில் நடிகர் ஆர்யா நடிக்க இருந்த நிலையில் சில பல காரணங்களால் ஆர்யாவிற்கு பதில் ஆன்சன் பால் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது பல வெற்றி படங்களை கொடுத்து பெண்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

வில்லனாக நடித்து
மலையாளத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தவர் தமிழில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்து பல சாதனைகளையும் முறியடித்த ரெமோ திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த முதல் படத்திலேயே வில்லனாக நடித்து அசால்ட் பண்ணி இருந்த ஆன்சன் பாலுக்கு தமிழிலும் ரசிகர்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது.

பலரையும் கவர்ந்து
தமிழ்த் திரைப்படத் துறையிலும் தனது காலடி பதித்து வரும் ஆன்சன் ரெமோ திரைப்படத்தை தொடர்ந்து 90எம்எல் மற்றும் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தொடர்ந்து பலரையும் கவர்ந்து வருகிறார்.

இசை ஆல்பங்களில்
இவ்வாறு மலையாளம் மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் ஹிந்தியிலும் ஓரிரு இசை ஆல்பங்களில் நடித்து உள்ளார். இவ்வாறு நடித்த சில படங்களிலேயே தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் பலரையும் ஈர்த்து பல ரசிகர்களை கொண்டு வெற்றிகரமாக வலம் வரும் ஹாண்ட்சம் ஹீரோ ஆன்சன் பால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்த நாள்
தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் அனைவரையும் வசீகரித்து வரும் இவர் ஜூலை 15 ஆம் தேதியான இன்று தனது 32 ஆவது பிறந்த நாளை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். மேலும் இவரின் பிறந்த நாளுக்கு இவரின் தீவிரமான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











