நடிகர் ஜெயசூர்யாவிற்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!
கொச்சி : மலையாள சினிமாவில் சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கி வரும் நடிகர் ஜெயசூர்யா தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்துள்ளார்.
Recommended Video
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பேர் சொல்லும் வகையில் தனது சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நடிகர் ஜெயசூர்யா தமிழில் "என் மன வானில்" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மலையாள திரையுலகில் ஒப்பற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயசூர்யா ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதோடு பல்வேறு திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பத்ரம்
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயசூர்யா, பலகுரல் பேசுவதில் வல்லவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான "பத்ரம்" திரைப்படத்தில் நடித்ததன் தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

வில்லன் கதாபாத்திரத்தில்
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னை அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி சிறந்த நடிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜெயசூர்யா இதுவரை பல்வேறு வேடங்களில் நடித்து இருக்கும் நிலையில் 2006 ஆம் ஆண்டு வெளியான "கிளாஸ்மேட்" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

தேசிய விருது
கேரளா ஸ்டேட் அவார்ட், பிலிம்பேர் அவார்ட், சைமா அவார்ட், ஆசியன் பிலிம் அவார்ட் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தனது சிறந்த நடிப்பிற்காக வென்றுள்ள ஜெயசூர்யா 2015 ஆம் ஆண்டு சிறந்த நடிகராக தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சூப்பர் ஹிட் திரைப்படங்களில்
இவ்வாறு மலையாளத் திரையுலகை தனது தனித்துவமான நடிப்பின் மூலமும் நகைச்சுவையான நடிப்பின் மூலமும் இன்றுவரை கலக்கி வரும் ஜெயசூர்யா தமிழிலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

என் மன வானில்
2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "ஊமப்பெண்ணினு உரியடப்பயன் " என்ற மெகா ஹிட் வெற்றி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான "என் மன வானில் " திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஜெயசூர்யா, அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றி நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

ஊமை கதாபாத்திரத்தில்
மலையாளத்தில் இந்த படம் வெற்றி அடைந்ததை போலவே தமிழிலும் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் ஜெயசூர்யா மற்றும் காவ்யா மாதவன் ஊமை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

துடிப்பான நடிப்பின்
என் மன வானில் திரைப்படத்தை தொடர்ந்து வசூல்ராஜா எம்பிபிஎஸ், மனதோடு மழைக்காலம், சக்கரவியூகம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயசூர்யா தனது துடிப்பான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களையும் இன்றுவரை கவர்ந்து வருகிறார்.

திரையுலகில் வெற்றி
இவ்வாறு சிறந்த நடிகராக வலம் வரும் ஜெயசூர்யா ப்ரீதம், புன்யாலன் அகர்பத்திஸ் என பல படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் மலையாளத் திரையுலகில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

42வது பிறந்தநாள்
இவ்வாறு சிறந்த நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டு மலையாளத் திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயசூர்யா ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சார்ந்த பல்வேறு திரை பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











