நடிகர் சரவணனுக்கு இன்று பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் 90களில் பலரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அறிமுகமான சில வருடங்களிலேயே உச்சநிலையை தொட்டவர் நடிகர் சரவணன்.

இவர் நடித்த பல திரைப்படங்கள் அப்போதைய முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி பல நாட்கள் திரையில் ஓடி வெற்றி நடைபோட்டன.

இவ்வாறு ஹீரோவாக வலம் வந்த சரவணன் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ரசிக்க வைத்தார். அக்டோபர் 10-ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி வருவதையொட்டி சமூக வலைதளங்களில் இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜயகாந்த் சாயலில்

விஜயகாந்த் சாயலில்

கருப்பான தேகம் லட்சணமான முகம் என தமிழ் சினிமாவை 1990களில் கலக்கி வந்தவர் நடிகர் சரவணன். பார்க்க விஜயகாந்த் சாயலிலேயே இருப்பதால் மிக எளிதாக மக்களிடத்திலே பரிச்சயமானவர்.

பல நாட்கள் ஓடி

பல நாட்கள் ஓடி

அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு இணையாக சரவணன் நடித்த திரைப்படங்களும் பல வசூல் சாதனைகளை செய்து திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கதாநாயகனாக

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு வெளியான "வைதேகி வந்தாச்சு" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக காலடியை பதித்த சரவணன் அதைத்தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, மாமியார் வீடு, சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும், தாய் மனசு என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அதிர வைத்தார்.

மிகப்பெரிய இழப்பு

மிகப்பெரிய இழப்பு

ஒரு நடிகராக தனது வெற்றிக் கொடியை நாட்டி வந்த சரவணன் தயாரிப்பாளராக முடிவெடுத்து விஸ்வநாத், சந்தோசம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தும்,
தாயுமானவன் என்ற திரைப்படத்தை இயக்கியும் இருந்தார். தயாரிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால் சினிமா துறையில் இருந்து சற்று விலகி இருந்த சரவணன் பின் 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான "பருத்திவீரன் " திரைப்படத்தில் அதிரடியாக களம் இறங்கி மிரட்டி இருந்தார்.

செவ்வாழை

செவ்வாழை

இவ்வாறு தனது செகண்ட் இன்னிங்சை பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தொடங்கிய சரவணன் அதில் செவ்வாழை கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று இவரின் கதாபாத்திரம் மிக பிரபலமாக பேசப்பட்டு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் இவருக்கு பெற்று தந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

இவ்வாறு தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது சுற்றை வெற்றிகரமாக தொடங்கிய சரவணன் சென்ற ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரையும் மகிழ்வித்து இருந்தார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக இருந்து வரும் நடிகர் சரவணன் அக்டோபர் 10 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி சமூக வலைதளங்களில் இவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X