உன்னாலே உன்னாலே நாயகன்.. வினய்க்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி என்ற பெருமைக்கு சொந்தக்காரர்களாக இருக்கும் சில நடிகர்களில் நடிகர் வினய்யும் ஒருவர்.

இயக்குனர் ஜீவா இயக்கத்தில் உருவான "உன்னாலே உன்னாலே " திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளியிட்டு பெண்களின் மனதை கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் சாக்லெட் பாயாக வலம் வந்தார் வினய்.

இவ்வாறு ஹீரோவாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த வினய் இப்போது பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதியான இன்று வினய் தனது பிறந்தநாளை கொண்டி வருவதையொட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கொடூரமான வில்லன்

கொடூரமான வில்லன்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "துப்பறிவாளன்" திரையரங்குகளில் சக்கை போடு போட்டு மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதில் வினய் முதன்முறையாக கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

உன்னாலே உன்னாலே

உன்னாலே உன்னாலே

தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மிரட்டி வரும் வினய் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான "உன்னாலே உன்னாலே" திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

மார்க்கெட் உயர்ந்தது

மார்க்கெட் உயர்ந்தது

பெண்களைப் பற்றி ஆண்களும் ஆண்களைப் பற்றி பெண்கள் எவ்வாறு புரிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக புட்டு புட்டு வைத்த "உன்னாலே உன்னாலே " திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற நிலையில் தனது முதல் திரைப்படத்திலேயே வினய்யின் மார்க்கெட் உயர்ந்தது.

ஆர்வம் காட்டவில்லை

ஆர்வம் காட்டவில்லை

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டும் வினய் அதன்பின் அடுத்தடுத்து வந்த பல காதல் கதைக் களங்களை கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

இளைஞர்களின் இதயங்களில்

இளைஞர்களின் இதயங்களில்

முதல் படத்திலேயே அசத்தலான வெற்றியை கொடுத்து இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்த வினய் தனது இரண்டாம் திரைப்படமான "ஜெயம் கொண்டான்" படத்தில் வெளிநாடுவாழ் தமிழராக நடித்து அசத்தி இருந்த நிலையில் இந்த திரைப்படமும் ரசிகர்கள் பாராட்டுகளை பெற்று வெற்றி பெற்றது.

கெரியரை காப்பாற்றியது

கெரியரை காப்பாற்றியது

சிறந்த திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்களை தொடர்ந்து திருப்திப்படுத்தி வந்த வினய் அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழில் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் "என்றென்றும் புன்னகை" மற்றும் "அரண்மனை" உள்ளிட்ட திரைப்படங்கள் இவரின் கெரியரை காப்பாற்றியது.

கொலைகார வில்லனாக

கொலைகார வில்லனாக

இவ்வாறு ஹீரோ கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர் யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் மிஷ்கின் இயக்கிய "துப்பறிவாளன்" திரைப்படத்தில் கொலைகார வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

டாக்டர்

டாக்டர்

ஒரே மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி கொள்ளாமல் வேறுவேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துக்காட்ட தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் வினய் இப்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் "டாக்டர்" திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

கோலிவுட்டில் பலரும் விரும்பும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வினய் செப்டம்பர் 19ஆம் தேதியான இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X