அந்த போட்டோவை பார்க்காதீங்க.. ஆன்மீகவாதியாக மாறிய மும்தாஜின் பிறந்த நாள் இன்று!
சென்னை: மலை மலை மல்லே மல்லே மருத மலை மல்லே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் நச்சுனு பதிந்தவர் நடிகை மும்தாஜ். கவர்ச்சி புயலாக வலம் வந்த மும்தாஜ் தற்போது ஆன்மீகவாதியாக மாறி உள்ள நடிகை மும்தாஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரின் பழைய பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ், மோனிசா என் மோனாலிசா என்கிற படத்தில் டி.ராஜேந்தர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் சரியாக போகவில்லை என்றாலும், அந்தபடத்தில் இடம் பெற்ற ஹலோ ஹலோ, உயிரே வா உறவே வா பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிப்பாடலாக அமைந்தால், முதல் படத்திலேயே மும்தாஜூக்கு நல்ல அடையாளம் கிடைத்தது.

நடிகை மும்தாஜ்: அந்த படத்தை தொடர்ந்து மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்தார். இவர், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான குஷி படத்தில் கவர்ச்சி உடையில் விஜயுடன் சேர்ந்து கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா என்ற பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் மும்தாஜ்.
இன்று பிறந்தநாள்: அதைத் தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் கலக்கி வந்த நடிகை மும்தாஜ், கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதன்பின் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்த மும்தாஜ், சினிமாவை விட்டே விலகினார். இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் நடிகை மும்தாஜ் இன்று 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பழைய பேட்டி: மும்தாஜின் பிறந்த நாளான இன்று, அவரின் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. அந்த பேட்டியில் மொத்தமாக மும்தாஜ் ஆன்மீகவாதியாக மாறியதைப் பற்றி பேசி உள்ளார். நான் அல்லாவே ஏற்றுக்கொண்டு என்னுடைய தவறுகளை புரிந்து மனம் திருந்தி விட்டேன். இதைப்பார்க்கும் சிலர், அது நாடகம் போடுகிறேன், பிரபலமாக வேண்டும் என்பதற்காக போடுகிறேன் என்றெல்லாம் பேசுகிறார்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு அல்லா ஒருவர் போதும் என்றார்.
ப்ளீஸ் பாக்காதீங்க: மேலும், என்னுடைய கடந்த காலத்தை பற்றி இப்போது தேடாதீர்கள்.. அதுதான் எனக்கு மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது. இப்போது உள்ள இளம் ரசிகர்களுக்கு நான் யார் என்பது தெரியாது, அவர்கள் அப்படியே இருந்து இருக்கட்டும், அவர்களிடம் என்னுடைய பழைய புகைப்படத்தையும் வீடியோக்களையும் யாரும் காட்டாதீர்கள். நான் முழுமையாக கடவுளை தேடி தன்னுடைய தவறுகளை எல்லாம் புரிந்து கொண்டேன். நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் இதுதான் என்று அந்த பேட்டியில் மனம் உருகி பேசி இருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











