ராஷி கண்ணாவுக்கு மட்டுமல்ல சங்கத்தமிழன் சண்டக்காரிக்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்!

Recommended Video

SANGATHAMIZHAN MOVIE REVIEW | POSTER PAKIRI | FILMIBEAT TAMIL

சென்னை: விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்திருந்தனர்.

சங்கத்தமிழன் நாயகிகள் இருவரும் இன்று ஒரே நாளில் தங்களின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

இதில், வேடிக்கை என்னவென்றால், நிவேதா பெத்துராஜை விட ராஷி கண்ணா ஒரு வருஷம் பெரியவர் என்பது தான்.

அடியே அழகே

ஒருநாள் கூத்து படத்தில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படம் தமிழில் நிவேதா பெத்துராஜுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்றும் பல இளைஞர்களின் காலர் ட்யூன்களாகவும், தங்களது காதலிகளை கொஞ்சும் பாடலாகவும் அடியே அழகே பாடல் இருந்து வருகிறது.

பொங்கல் ரேஸ்

பொங்கல் ரேஸ்

ரஜினி, நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தில் முதல் முறையாக பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.

டோலிவுட்டில் கலக்கல்

தமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், டோலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புரோச்சேவரெவுரா மற்றும் சித்ரலஹரி படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தன. வரும் 2020ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அள வைகுந்தபுரமுலோ படத்திலும் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார்.

சண்டக்காரி

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி முதல் முறையாக டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். சங்கத்தமிழன் நாயகிகள் இருவருக்கும் இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. நிவேதா பெத்துராஜின் பிறந்த நாளை முன்னிட்டு சோனி மியூசிக் செளத் சண்டக்காரி நீதான் பாடலை டெடிகேட் செய்துள்ளது.

இத்தனை திறமைகளா

நிவேதா பெத்துராஜ், சிறந்த நடிகை, கார் ரேசர், பைக் ரேசர், போட்டோகிராபர், ஹெலிகாப்டர் பைலட் டிரைனர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைஸர், ரைஃபிள் ஷூட்டர், சிறந்த மனிதி என பன்முக திறமைகள் கொண்டவர் என இந்த ரசிகர் நிவேதா பெத்துராஜ் குறித்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X