வனிதா விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : நடிகை வனிதா விஜயகுமாரை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்கும் தெரிந்த முகமாகி பிரபலமாக இருக்கிறார் வனிதா.

ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சமீபத்தில் வெளியான பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இப்பொழுது புகழின் உச்சிக்கு சென்ற இவர் நடிகை, தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

இந்நிலையில் அக்டோபர் 5ம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி இவரது ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பொக்கிஷமாக

பொக்கிஷமாக

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் இப்போதுள்ள டிவி சேனல்களின் பொக்கிஷமாக விளங்கி வருகிறார்.

சர்ச்சையிலும் சிக்கி

சர்ச்சையிலும் சிக்கி

ஆரம்பத்தில் திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்த வனிதா இப்பொழுது பல்வேறு தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமாகி வருவதோடு அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார்.

உச்ச நட்சத்திரமாக

உச்ச நட்சத்திரமாக

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய்யுடன் இணைந்து 1995 ஆண்டு "சந்திரலேகா" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா அதன்பின் ராஜ்கிரண் உடன் இணைந்து "மாணிக்கம்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தயாரித்து நடித்து

தயாரித்து நடித்து

சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட திரைப்படங்களிலைத் தொடர்ந்து தெலுங்கு மலையாள மொழிகளிலும் நடிக்கத் தொடங்கிய இவர் ஓரிரு திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்களில் வந்து தலையை காட்டி செல்ல பின் 2015ஆம் ஆண்டு வெளியான "எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து இருந்தார்.

கதிகலங்க வைத்தார்

கதிகலங்க வைத்தார்

இவ்வாறு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வனிதா யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில் 2019ஆம் ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் கதிகலங்க வைத்தார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

துணிச்சலான பேச்சு, எத்தனை பேர் வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று சமாளிக்கும் பேச்சுத் திறமை என பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்த வனிதா விஜயகுமார் பாதியிலேயே வெளியேற்றப்பட்ட நிலையில் பின் மீண்டும் வயல்ட் காட்டில் ரீ என்ட்ரி கொடுத்து மாஸாக வந்து இறங்கி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

முக்கிய காரணமாக

முக்கிய காரணமாக

தமிழில் இதுவரை வெளியான பிக் பாஸ் சீசன்களிலேயே சீசன் 3 அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதற்கும், அதிக அளவில் பேசப்பட்டதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தவர் வனிதா விஜயகுமார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜய் டிவியுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் வனிதா அதை தொடர்ந்து குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு பெரும் பெயருக்கும் புகழுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன நடிகை வனிதா விஜயகுமார் அக்டோபர் 5ம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X