இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!
சென்னை : திருவிழா நாளான இன்று திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன் தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துணை நடிகராக தனது திரை பயணத்தை ஆரம்பித்து அவர் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்.

இவர் வரிசையாக நடித்து வரும் படங்கள் அனைத்தும் பலருக்கு பிடித்து பல ரசிகர்களை இவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. இவரது பிறந்த நாளை ரசிகர்கள் டுவிட்டரில் டிரென்டு ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.

தனது டைமிங் காமெடியால் பலரையும் கவர்ந்தவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் காமெடி செய்து கொண்டு இருந்த ரோபோ சங்கரை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்டது.
பின் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையுலகில் இவரது காமெடி தேவை என்ற ஒரு பிம்பம் உருவாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என்று சொல்லப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தான் இவர். இளைய திலகம் பிரபுவின் மகன். தனது தாத்தா மற்றும் அப்பாவை போல இவரும் நடித்து கொண்டு இருக்கிறார்.
தனது முதல் படத்திலேயே தனது நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு பாராட்டுக்கள் பெற்றார். இவருக்கும் இன்று பிறந்த நாள்


Click it and Unblock the Notifications











