For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காண்ட்ராக்டர் நேசமணிக்கு இன்று 59ஆவது பிறந்த நாள் - கொண்டாடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

  |

  சென்னை: இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் வடிவேலுவை மீம்ஸ் கிரியேட்டர்களின் அரசன் என்றே சொல்லலாம். வடிவேலுவின் நகைச்சுவை மட்டும் இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது. தினந்தோறும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான்.

  ஒருவரை கோபப்பட வைக்கவேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும் என்றால் அது அனைவராலும் முடிந்து விடும் அதுவே ஒருவரை வாய்விட்டு சிரிக்க வைக்க எல்லோராலும் முடிந்து விடுமா என்ன. நிச்சயம் முடியவே முடியாது.

  Today Contractor Nesamani’s 59th Birthday

  ஆனால் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாய் விட்டு வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் தான் வைகை புயல் வடிவேலு. அவரின் எதார்த்தமான நடிப்பாலும் சில வித்தியாசமான முக பாவங்களாலும், உடல் அசைவுகளாலும் ரசிகர்ளை தன் வசம் ஈர்த்தவர்.

  இப்படி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த வடிவேலு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்று பலர் சொல்லிவரும் நிலையில் அவரது உண்மையான பிறந்த நாள் இன்று தானா என்பது குழப்பமாகவே உள்ளது. இருப்பினும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  இந்த தமிழ் திரையுலகம் எத்தனை எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை பார்த்துள்ளது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் புண்படுத்தாமல் தனது தனித்துவமான விஷயங்கள் மூலம் டைப் டைப்பாக காமெடி செய்வதில் கில்லாடி நம் வடிவேலு தான்.

  அவர் கடந்து வந்த திரைப்பயணம் மிகவும் கலகலப்பானது. அரசியல், சமூக நிலவரம் என அனைத்தையும் கேலி செய்ய மிகவும் பொருத்தமாக இருக்கும் அவரின் நகைச்சுவை வசனங்கள், முக பாவங்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனாலேயே வடிவேலு மீம்ஸ் அரசன் என்று அழைக்கப்படுகிறார். இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக இருப்பது வடிவேலுவின் நகைச்சுவை தான். இவரின் நகைச்சுவை இல்லை என்றால் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வேலையே கிடையாது.

  வக்கீல் வண்டு முருகன், படித்துறை பாண்டி, நேசமணி காண்ட்ராக்டர், அலெர்ட் ஆறுமுகம், சினேக் பாபு, கைப்புள்ள, 23ம் புலிகேசி இப்படி பல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்தவர். அந்த பெயர்களை கேட்டாலே நமக்கு சிரிப்பு வரும் அளவிற்கு அவர் கதாபாத்திரத்தோடு ஒன்றி போய் நடிப்பார்.

  அரசியல்வாதி, திருடன், போலீஸ், வக்கீல் என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் நகைச்சுவை உணர்வோடு சிறப்பாக செய்யக்கூடியவர். மிக அதிகமான கதாபாத்திரங்களில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்த ஒரே நடிகர் வடிவேலு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  படத்திற்கு படம் வேறுபட்ட காமெடிகள் தருவதில் வல்லவர். பெண் வேடங்களிலும் பல படங்களில் கச்சிதமாக நடித்துள்ளார். அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அவரது வசனங்களும், முகபாவங்களும் பொருத்தமாக இருப்பது அவரது சிறப்பம்சம்.

  காமெடியில் கலக்குவது மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அவரின் பாடும் திறனும் அபாரம். முன்னணி நடிகர்களுக்கு சமமாக பஞ்ச் டையலாக் பேசுவதில் வல்லவர். ஆணியே புடுங்க வேண்டாம், பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக் போன்ற நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் சில அடைமொழிக்கும் சொந்தக்காரர் வடிவேலு.

  நெட்டிசன்களுக்கு வடிவேலுவின் வசனங்கள் ஒரு வரப்பிரசாதமே. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் அவரின் நகைச்சுவையை நாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்படையவே செய்யாதது அவரது தனிசிறப்பு. மீண்டும் அவர் திரையுலகில் பல படங்களில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். வாழ்க வளமுடன்.

  English summary
  Vadivelu, who celebrates his birthday today, can be said to be the king of Mems. If it were not for Vadivelu's humor, Mims Creators would have no job today. Vadivelu's joke is that Memes is a good feeder for creators every day.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X