பிக்பாஸ் ஹேன்ட்சம் பாய் தர்ஷனுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் காமன் டிபி !

சென்னை : சென்ற ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலும் உள்ள பல தமிழ் குடும்பங்களுக்கு மிகவும் பரிச்சயமாகி செல்லப்பிள்ளையாக மாறிப் போனவர் நடிகர் தர்ஷன்.

எதையும் துணிச்சலாக பேசும் பண்பை கொண்ட தர்ஷன் பிக் பாஸ் சீசன் 3ல் மிகச் சிறந்த போட்டியாளராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் இவருக்கு ரசிகர் கூட்டமும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

திருப்புமுனையாக

திருப்புமுனையாக

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தர்ஷன் சென்னையில் மாடலிங் மற்றும் திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வர தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நேர்மையான விளையாட்டின்

நேர்மையான விளையாட்டின்

சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக களமிறங்கிய தர்ஷன் தனது நேர்மையான விளையாட்டின் மூலமும், தைரியமான பேச்சின் மூலமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்து போட்டியாளர்களில் சிறந்தவராக பலராலும் பாராட்டப்பட்டார்.

வாய்ப்பு கிடைத்தது

வாய்ப்பு கிடைத்தது

இந்திய அளவில் பல்வேறு மாடலிங் போட்டிகளில் பங்கேற்று வெற்றியாளராக மகுடம் சூடி வந்த தர்ஷன் தமிழில் " மேகி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இவருக்கு பிக்பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

சர்ச்சைகளிலும் சிக்கி

சர்ச்சைகளிலும் சிக்கி

அவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பிக் பாஸில் எந்த அளவுக்கு நல்ல பெயரும் புகழும் எடுத்தாரோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தன்னை ஏமாற்றி விட்டதாக

தன்னை ஏமாற்றி விட்டதாக

இவருடன் பங்கேற்ற மற்றொரு போட்டியாளரான நடிகை ஷெரின் உடன் கிசுகிசுக்களில் அடிபட்டதால் இவருக்கு ஆப்பு வைப்பது போல இவரது காதலியான சனம் ஷெட்டி இவருக்கு எதிராக தன்னை ஏமாற்றி விட்டதாக போர்க்கொடி தூக்கி அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இப்பொழுது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வெளியேற்றப்பட்டார்

வெளியேற்றப்பட்டார்

சாண்டி, முகின், கவின், லாஸ்லியா, சேரன், சரவணன் என பலரும் கலந்து கொண்ட இந்த சீசன் 3 ல் தர்ஷன் தான் வெற்றியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த நிலையை அடைவதற்கு முன்பாகவே தர்ஷன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாபெரும் ஆறுதலாக

மாபெரும் ஆறுதலாக

எனினும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனது தயாரிப்பின் கீழ் தர்ஷன் ஹீரோவாக நடிப்பார் என மேடையிலேயே கூறியது ரசிகர்களுக்கு மாபெரும் ஆறுதலாக இருந்த நிலையில், இப்பொழுது தர்ஷன் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி ஹீரோவா நடித்து வருகிறார்.

பிறந்தநாள் காமன் டிபி

பிறந்தநாள் காமன் டிபி

இவ்வாறு இளம் வயதிலேயே அதிக ரசிகர்களை கொண்டு விரைவில் சிறந்த நடிகராக ஜொலிக்க இருக்கும் நடிகர் தர்ஷன் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்டோர் இவரது பிறந்த நாள் காமன் டிபியை வெளியிட்டு சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X