எப்போது தான் கேட்குமோ அந்த மறுவார்த்தை.. ஹேப்பி பர்த்டே மேகா ஆகாஷ்!

நடிகை மேகா ஆகாஷின் 24வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. பேட்ட, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் வந்தாலும், கெளதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்குத்

சென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பேசாதே பாடலில் மோகன புன்னகை புரிந்து ரசிகர்களை தனக்கு விசிறி ஆக்கிய நடிகை மேகா ஆகாஷின் பிறந்த தினம் இன்று.

பேட்ட, பூமராங், வந்தா ராஜாவாதான் வருவேன் என பல தமிழ் படங்கள் இவரது நடிப்பில் வெளியானாலும், கெளதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டாவின் ரிலீசுக்காகத் தான் இவரும் இவரது ரசிகர்களும் வெயிட்டிங்.

காத்திருப்பு

காத்திருப்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடல் வெளியாகி ரசிகர்களின் மனங்களை வென்ற நிலையில், படத்தின் ரிலீசுக்காக இவரும் ரசிகர்களும் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.

பறந்தாச்சு

பறந்தாச்சு

கோலிவுட்டில் இவர் நடிப்பில் வெளியான பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங் உள்ளிட்ட படங்களில் இவருக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்காத நிலையில், பாலிவுட்டிற்கு பறந்துவிட்டார். சேட்டிலைட் ஷங்கர் எனும் பாலிவுட் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் அந்த டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் அந்த படமும் திரைக்கு வருகிறது.

எப்போது ரிலீஸ்

எப்போது ரிலீஸ்

கடந்த ஜூலை மாதம் கண்டிப்பாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகி விடும் என ரிலீஸ் டிரைலரை எல்லாம் கெளதம் மேனன் ரிலீஸ் செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை. தற்போது அசுரன் கொடுத்துள்ள பிளாக்பஸ்டர் வெற்றியின் மூலமாக தடைகளை தகர்த்து வரும் நவம்பர் மாதம் எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

தமிழ்நாட்டில் உள்ள காரியப்பட்டியில், 1995ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி மேகா ஆகாஷ் பிறந்தார். தமிழ் பெண்ணாக இருந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X