சூரரைப் போற்று, மாஸ்டர்.. செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு… சாயங்காலம் இருக்கு செம சம்பவம்!

சென்னை: மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், மாஸ்டர் செகண்ட் லுக்குக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் செகண்ட் லுக் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களின் போஸ்டர் டிசைனையும் கோபி பிரசன்னா தான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ட்ரா கிளாஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்ட்ரா கிளாஸ் என்றும் செகண்ட் லுக்குக்காக வெயிட்டிங் என ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு காத்திருக்கின்றனர்.

2.5 மில்லியன் ட்வீட்ஸ்

புத்தாண்டை முன்னிட்டு வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் டேக்கிற்கு 2.5 மில்லியன் ட்வீட்களை போட்டு விஜய் ரசிகர்கள் உலகளவில் டிரெண்ட் செய்தனர். பல பிரபலங்களும் ரசிகர்களை போலவே ஃபர்ஸ்ட் லுக் பார்த்து மிரண்டு போய் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

மாலை 6 மணிக்கு

நேற்று மாலை 5 மணிக்கு விஜய்யின் மாஸ்டர் லுக்கை பார்த்து சாமி ஆடிய ரசிகர்கள், இன்று மாலை 6 மணிக்கு மறுபடியும் சாமி ஆட தயாராகி வருகின்றனர்.

வலிமை டிசைன்

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டைலில் தல அஜித்தின் வலிமை படத்தின் போஸ்டர் டிசைனை அஜித் ரசிகர்கள் டிசைன் செய்து அதனையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கில்லி டா

இந்த ஏரியா அந்த ஏரியா எந்த எரியாவுலயும் எனக்கு பயம் கிடையாது டா.. ஏன்னா ஆல் ஏரியாவுலையும் ஐயா கில்லி டா.. என மாஸ்டர் லுக் தீயாக இருக்கிறது என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

யாரெல்லாம் வெயிட் பண்றீங்க

யாரெல்லாம் மாஸ்டர் செகண்ட் லுக்குக்கு வெயிட் பண்றீங்க அவங்களாம் ஆன்லைனுக்கு வாங்க என இந்த ரசிகர் ஆள் சேர்க்கிறார்.

வேற லெவல் விஜய்சேதுபதி

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் மட்டுமே இடம்பெற்றிருந்தார். மாஸ்டர் செகண்ட் லுக்கில் விஜய்சேதுபதியும் இடம்பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து ஃபேன் மேட் போஸ்டர்களை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இடி இடிக்குது

மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் பல தளபதி ரசிகர்கள் அவர்களின் ஃபேன் எடிட்களை செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சாயங்காலம் செம சம்பவம்

சாயங்காலம் செம சம்பவம்

சூர்யாவின் சூரரைப் போற்று செகண்ட் லுக் மற்றும் விஜய்யின் மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், விஜய் - சூர்யா ரசிகர்களுக்கு இடையே இன்று மாலை ட்விட்டரில் செம சம்பவம் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X