“மெட்ராஸ் பட நாயகி ..கேத்ரின் தெரசாவுக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

சென்னை : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து அனைவரும் விரும்பும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கேத்ரின் தெரசா.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமீபத்தில் சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் அதே வேளையில் பாடகி சின்மயி, நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோருக்கும் இன்று பிறந்தநாள்.

சிறந்த நடிகைகளில்

சிறந்த நடிகைகளில்

தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் திரையுலகினரை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்தி வரும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கேத்ரின் தெரசா கன்னட திரைப்படங்களில் நடித்து அறிமுகமானதன் மூலம் திரைத்துறையில் தனது காலடி பதித்தார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

கன்னடம் தெலுங்கு என கொடிகட்டி பறந்த இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய "மெட்ராஸ்" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானதை அடுத்து இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

இவ்வாறு இவர் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு 2 என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரையுலகினர் வாழ்த்து

திரையுலகினர் வாழ்த்து

இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று இவர் தனது 31வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X