இன்று என்ன நாள் என்று ரித்விகாவுக்கு தெரியுமோ, தெரியாதோ?
Recommended Video

சென்னை: இன்று என்ன நாள் என்று ரித்விகாவுக்கு தெரியுமோ, தெரியாதோ?
பிக் பாஸ் 2 வீட்டிற்கு செல்லும் முன்பு ரித்விகா சதாவுடன் சேர்ந்து நடித்த டார்ச்லைட் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் ரித்விகா பாலியல் தொழில் செய்பவராக நடித்துள்ளார்.
பாலியல் தொழிலாளியாக ரொம்ப எதார்த்தமாக அவர் நடித்திருக்கிறார்.

ரிலீஸ்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரித்விகாவுக்கு தான் நடித்த படம் இன்று வெளியாகியுள்ளது என்பது தெரியுமோ, தெரியாதோ?. ரித்விகா பிக் பாஸுக்கு சென்றதால் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சதா மட்டும் கலந்து கொண்டார். பாலியல் தொழிலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் சென்சார் போர்டில் போராடி சான்றிதழ் வாங்கியுள்ளனர்.

கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாஸன் தான் நடித்த விஸ்வரூபம் 2 படத்தை அங்கு விளம்பரம் செய்தார். விஸ்வரூபம் 2 படக்குழுவினரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல். போட்டியாளர்கள் அனைவருக்கும் விஸ்வரூபம் 2 டிசர்ட் அளித்து அணிய வைத்தார். அப்படி இருக்கும்போது ரித்விகாவின் படத்தை ஏன் பிக் பாஸில் ப்ரொமோட் செய்யவில்லை?

ரித்விகா
எந்த விஷயத்திலும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் ரித்விகா போலியாக உள்ளார், சேஃப் கேம் ஆடுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அவர் விஜயலட்சுமியை காப்பாற்ற கையில் டாட்டூ குத்தியதன் மூலம் பலரின் பாராட்டை பெற்றார். ஆனால் ஊசி என்றால் பயம் என்று கூறி அழுத ரித்விகா கையில் ஏற்கனவே ஒரு டாட்டூ இருப்பதை பார்த்துவிட்டு அப்போ இது என்னம்மா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹேர் கலர்
ரித்விகாவை காப்பாற்ற மும்தாஜ் தனது தலைமுடிக்கு கலர் அடிக்க மறுத்துவிட்டார். மும்தாஜ் காப்பாற்றாவிட்டால் என்ன நாங்கள் இருக்கிறோம், ஓட்டு போட்டு காப்பாற்றிவிடுகிறோம் என்று ரித்விகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் பட்டும் படாமலும் இருப்பது ரித்விகாவின் யுக்தியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











