For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'பெட்ரோமாக்ஸ் லைட் வேணுமா', நையாண்டி மன்னன், கவுண்டமணியின் பிறந்தநாள் இன்று

  |

  சென்னை: தமிழ் சினிமாவில் நீண்டகாலம் போராடி பின்னர் 1980 களில் நல்ல வேடங்களில் கால்பதித்து முன்னேறி உச்சம் தொட்டவர் கவுண்டமணி.

  திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ளவர். தன்னுடைய 25 வது வயதில் திரையுலக பயணத்தை தொடங்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணம் செய்தவர்.

  நாடகங்களில் சுட்டிக்காட்டி எதிர் மறை வசனங்கள் பேசியதால் (counterpoint) கவுன்டர் மணி என (counter Mani) அழைக்கப்பட்டவர் பின்னர் கவுண்டமணி ஆனார்.

  ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்...இது வேற லெவல் ப்ரோமோஷனா இருக்கே ஹாலிவுட் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்...இது வேற லெவல் ப்ரோமோஷனா இருக்கே

  லொள்ளு சபாவின் முன்னோடி கவுண்டமணி

  லொள்ளு சபாவின் முன்னோடி கவுண்டமணி

  விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலம். அந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடி நடிகராக உயர்ந்தவர் பலர் உண்டு அதில் முக்கியமானவர் சந்தானம். இந்த லொள்ளு சபா கான்செப்ட்டை திரையுலகில் சந்தானம் பிறப்பதற்கு முன்னரே தனது சேட்டைகள், எதிர்மறை வசனங்கள் மூலம் செயல்படுத்தி புகழ்பெற்றவர் கவுண்டமணி.

  சீர்த்திருத்த கருத்துக்களை சொன்னவர்

  சீர்த்திருத்த கருத்துக்களை சொன்னவர்

  சினிமாவில் நக்கல் நையாண்டி, கதாநாயகனையே கலாய்ப்பவர்கள் என திரையுலகில் எம்.ஆர்.ராதாவை சொல்வார்கள். அவர் வழியில் பல சீர்த்திருத்த கருத்துகளை திரையில் சொன்னவர் கவுண்டமணி. இவரது வெளிப்படையான அதிரடி பேச்சு சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இன்றளவும் மற்றவர்களை கலாய்ப்பது என்றால் கவுண்டமணி காமெடிதான் சொல்லப்படும்.

  கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை

  கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை

  நாடகத்திலிருந்து சினிமாத்துறைக்கு வந்தார் கவுண்டமணி. இயற் பெயர் சுப்பிரமணியன் கருப்பையா, நாடகங்களில் கவுண்டர் பாயிண்ட் கொடுத்து பேசியதால் கவுண்டர் மணி என்று அழைக்கப்பட்டார் பின்னர் கவுண்டமணியாக அழைக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டு சினிமா துறைக்கு வந்தார். சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன், ராமன் எத்தனை ராமனடி போன்ற படங்களில் சிறிய வேடங்களே கிடைத்து வந்தது. நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, சோ போன்றவர்கள் கோலோச்சிய காலம் அது.

  சுருளிராஜன் மறைவு 16 வயதினிலே வரவு

  சுருளிராஜன் மறைவு 16 வயதினிலே வரவு

  கவுண்டமணிக்கு முன்னோடி சுருளிராஜனே சாதாரண ரோலில் நடித்து வந்தார். பின்னர் சுருளிராஜன் லேசாக தலையெடுக்க தொடங்கிய காலம், 16 வயதினிலே இளம் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் புதுமுக நடிகர் ரஜினியின் அடியாளாக பரட்ட பத்த வச்சிட்டியே பரட்ட என இவர் சொல்வதும், ஏய் அல்லய தேய்டா என ரஜினி சொல்வதும் என சாதாரணமாக இருந்த கவுண்டமணி வெளியே தெரிய ஆரம்பித்தார்.

  படிப்படியாக முன்னேறிய கவுண்டமணி

  படிப்படியாக முன்னேறிய கவுண்டமணி

  பின்னர் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் பெயர் சொல்லும் பாத்திரம் கிடைத்தது. சுருளி ராஜன் மறைவுக்குப்பிறகு வித்தியாசமான நடிப்பால் கவுண்டமணி முன்னுக்கு வந்தார். இடையில் செந்திலும் சேரவே டாம் அண்ட் ஜெர்ரி பாணியில் லாரல் ஹார்டி போல் இரட்டையர்களாக காமெடியில் கலக்க ஆரம்பித்தனர். 1980 களில் இவர்களால் பல இளம் கதாநாயகர்கள், புதுமுக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் படங்கள் ஓடியது.

  கவுண்டமணி செந்தில் ஜோடியால் ஓடிய படங்கள்

  கவுண்டமணி செந்தில் ஜோடியால் ஓடிய படங்கள்

  இளையராஜா இசையால் ஓடிய படங்கள் என சொல்லப்படும் கோவைதம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலும், ராமராஜன் படங்களிலும் இந்த இரட்டையர் ஜோடி அட்டகாசம் காரணமாக பல படங்கள் ஓடியது. சரத்குமார் கதாநாயகனாக அறிமுகமான சூரியன் படத்தில் லோக்கல் அரசியல்வாதியாக வந்து நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ஸ்டார்ட் மியூசிக் போன்ற வசனங்களால் பிரபலமானார்.

  ஆல் இன் ஆல் அழகுராஜா காமெடி

  ஆல் இன் ஆல் அழகுராஜா காமெடி

  உதயகீதம், இதயக்கோயில், நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தால் போன்ற படங்களில் கவுண்டமணி அடிக்கும் லூட்டியும், இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா இங்க பிறந்திருக்க வேண்டியவனே இல்லடா என்பதும், பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா என்பதும், கூட வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் இல்லன்னு சொல்வதும், கோழி குருடாக இருந்தாலும் என பேசுவதும் செம்மையாக ரசிக்கப்பட்டவை.

  நான் பாடும் பாடல் அடுப்புக்கரி ஜோக்

  நான் பாடும் பாடல் அடுப்புக்கரி ஜோக்

  அந்த காலத்தில் ரெக்கார்டுகளிலும், கேசட்டுகளிலும் கவுண்டமணி செந்திலின் காமெடிகள் வசனங்கள் ஊர்தோறும் ஒலிக்கும். நான் பாடும் பாடலில் பாவி கறி வாங்கிட்டுவான்னு சொன்னா அடுப்புக்கரிய வாங்கிட்டு வந்திருக்கியேன்னு சொல்லும்போது அதான் இவ்வள்வு கொடுத்தானான்னு கேட்பதும், வீட்டு ஓனராக வந்து கதாநாயகனையே கலாய்க்கும் காட்சிகளும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

  ரஜினியையே கலாய்த்த மன்னன்

  ரஜினியையே கலாய்த்த மன்னன்

  விவேக், வடிவேலு காலத்துக்கு முன்னர் கவுண்டமணியின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறந்தத்து. வேலை தெரியாதவனையெல்லாம் என் தலையில கொண்டுவந்து கட்டிடறாங்கப்பா என மன்னனில் ரஜினியை கலாய்ப்பதும் அவர் யார் என தெரிந்தப்பின் என்ன படிச்சிருக்க என ரஜினி கேட்கும்போது வேலை செய்ய தெரியாத அளவுக்கு என பம்முவதும், நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா என விஜய சாந்தியை கலாய்ப்பதும் பெரிதாக ரசிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள்.

  கலகல கரகாட்டக்காரன்

  கலகல கரகாட்டக்காரன்

  கரகாட்டக்காரனின் ரெண்டு பழம் ஒர்ருவா காமெடியும் அதை திரும்ப திரும்ப கேட்டு அடிப்பதும், காரை தள்ளிக்கொண்டு வரும்போது செந்தில் கேட்ட கேள்வியால் கோபமடைந்து திட்டுவதும், கோவை சரளாவை ஆமா ஜப்பான்ல கூப்பிட்டாக அமெரிக்காவுல கூப்பிட்டாக என கலாய்ப்பதும், செந்திலிடம் உனக்கு கிடைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவைதானா, சினிமாக்காரனுங்கதான் இப்படி விளம்பரத்துக்கு அலைவானுங்க என்று சினிமா கதாநாயகர்களையே விலாசும் தைரியம் கவுண்டமணிக்கு மட்டுமே உண்டு.

  செட்டையே கலகலப்பாக்கும் கவுண்டமணி

  செட்டையே கலகலப்பாக்கும் கவுண்டமணி

  கவுண்டமணி சத்யராஜ் காமெடி மிகவும் வரவேற்கபட்ட காமெடி ஆகும். ஒருத்தருக்கொருத்தர் நக்கல் நய்யாண்டி என அய்யா உலக மகா நடிப்புடா சாமின்னு கலாய்க்கும் வார்த்தை இவர்கள் படத்தில் தான் வந்தது. செட்டில் சீரியசான காட்சியில் நடிக்கும்போது கவுண்டமணி இருந்தால் அவர் அடிக்கும் கவுண்டர் பிட் வசனங்களால் சத்யராஜால் நடிக்கவே முடியாமல் விழுந்து விழுந்து சிரித்து பல டேக் வாங்கும் நிலை ஏற்படுமாம்.

  ஷங்கரின் முதல் பட காமெடி நடிகர்

  ஷங்கரின் முதல் பட காமெடி நடிகர்

  ஷங்கரின் முதல் படம் ஜென்டில் மேனில் அர்ஜுனுடன் சேர்ந்து அவர் கொள்ளையடிக்கும் காட்சிகள், டிக்கிலோனா காமெடி என கலைக்கட்டும், அதேபோல் ஆர்.பார்த்திபனுக்கு இணையாக கவுண்டருக்கு கவுண்டர் கொடுத்து திருடனாக நடித்திருப்பார். பார்டனர் என அழைத்து இருவரும் செய்யும் அட்டகாசம் படம் முழுக்க இருக்கும்.

  உருவக்கேலி, ஊனத்தை கேலி செய்த காமெடிகள்

  உருவக்கேலி, ஊனத்தை கேலி செய்த காமெடிகள்

  கவுண்டமணி படங்களில் எல்லாம் உருவக்கேலி, அதிக அளவில் மட்டம் தட்டுவது, ஊனத்தை குறை சொல்வது அதிகம் இருந்தது என்கிற விமர்சனம் உண்டு. அதற்கு கவுண்டமணியை மட்டும் குறை சொல்ல முடியாது, அன்றைய காலக்கட்டத்தில் இது சரி என்கிற மனோபாவம் இருந்தது. காலம் மாறியது கவுண்டமணிக்குப்பின் பலர் வந்தப்பின் இதுபோன்ற ஊனத்தை கொச்சைப்படுத்தும் காட்சிக்கு தடையிருந்தாலும் உருவக்கேலி இன்றும் காமெடி என கொண்டாடத்தான் படுகிறது.

  ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்ட கவுண்டமணி

  ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்ட கவுண்டமணி

  ஒரு காலத்தில் 2வது ஹீரோ போல் கவுண்டமணி பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், விஜய், அஜித் என பல நடிகர்களுடன் கவுண்டமணி இணையான ரோல் செய்துள்ளார். மன்னன் படத்தில் நடிக்க கேட்டபோது உச்ச நட்சத்திரமாக இருந்த கவுண்டமணி ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்டதாக சொல்வார்கள். 2000 க்குப்பிறகு படவாய்ப்புகள் குறைய திரைப்படத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் கவுண்டமணி.

  இன்றும் ஆக்டிவாக இருக்கும் கவுண்டமணி

  இன்றும் ஆக்டிவாக இருக்கும் கவுண்டமணி

  கடைசியாக கதாநாயகனாக 49 ஓ படத்தில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நடித்தார். வயோதிகம் காரணமாக படத்தில் நடிப்பதில்லை. ஆனாலும் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார். ஆயிரம் நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் மீம் நாயகனாக கவுண்டமணி என்றும் பேசப்படுவார்.

  English summary
  'petromax lighte venuma' Today is the birthday of the satire comedy king Gavunda mani.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X