பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக சித்ராவை எத்தனை நாளைக்கு பார்க்க முடியும்? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Pandian Stores Mullai | Kavya as Mullai Official Update | Vj Chithra |Filmibeat Tamil

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா மரணமடைந்து இன்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.

சித்ரா கணவர் கைது

சித்ரா கணவர் கைது

சித்ரா நடத்தையில் அவரது கணவரான ஹேமந்துக்கு ஏற்பட்ட சந்தேகம் தான் சித்ராவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஹேமந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனனர் போலீசார்.

சித்ராவின் முன்னாள் காதலர்கள்

சித்ராவின் முன்னாள் காதலர்கள்

ஆனால் சித்ராவின் மாமனார் தனது மகன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யாரை காப்பாற்ற தனது மகனை கைது செய்துள்ளார்கள் என்று கூறிய அவர், சித்ராவின் தற்கொலைக்கு அவரது முன்னாள் காதலர்களே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

இதனால் சித்ராவின் மரண வழக்கு சூடு பிடித்துள்ளது. இதனிடையே சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோரஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

இனி யார் சித்ரா?

இனி யார் சித்ரா?

இதில் நடிகர் குமரனுக்கு ஜோடியாக நடித்தார் சித்ரா. அந்த ஜோடிக்காகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்தவர்கள் பலர். இந்நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

முல்லையாக வாழ்ந்த சித்து

முல்லையாக வாழ்ந்த சித்து

சித்ரா அந்த சீரியலில் முல்லையாகவே வாழ்ந்திருந்தார் என்பதால் இனி அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றனர். இதையடுத்து நடிகை சரண்யா முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்தார் சரண்யா.

இன்ஸ்டாவில் தகவல்

இன்ஸ்டாவில் தகவல்

அதேபோல் சீரியல் நடிகை ஜனனியும் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கூறினார். இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமாராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி முல்லையாக நடிக்கப்போவது இவரா என்று பதிவிட்டு ஒரு யூடியூப் வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

காவ்யாதான் முல்லை

காவ்யாதான் முல்லை

அதில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை காவ்யா இனி முல்லையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதனால் காவ்யா தான் இனி முல்லையாக நடிக்கவுள்ளார் என்று தெரியவந்தது.

இன்றுடன் நிறைவு

இன்றுடன் நிறைவு

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சித்ரா முல்லையாக நடித்த காட்சிகள் அனைத்தும் டிசம்பர் 23ஆம் தேதி அதாவது இன்றுடன் நிறைவடைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பார்க்க முடியாது

இனிமேல் பார்க்க முடியாது

இதன்பிறகு ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சித்ராவை ரசிகர்கள் பார்க்க முடியாது. இது பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் நடிகை சித்ரா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X