twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழிந்து வரும் மேடை நாடகம் ...நினைவூட்ட மேடை நாடக தினம்!

    |

    சென்னை : மேடை நாடக தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 மேடை நாடக நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலாக 1961ல் மேடை நாடக நாள் என 'இன்டர்நேஷனல் தியேட்டர் இன்ஸ்டிடியூட்டால்' துவங்கபட்டது. அன்றிலிருந்து இன்று வரை மார்ச் 27 தேதி உலக மேடை நாடக தினமாக கொண்டாடபட்டு வருகிறது .

     Today is world theater day

    இந்த விழா கொண்டாடபட முதல் நோக்கமாக பார்க்கப்படுவது சினிமாக்களின் அசுர வளர்ச்சிக்கு பின்னர் மேடை நாடகங்கள் உலகம் முழுவதுமே பெரிய அளவில் சரிவை சந்தித்து. மேடை நாடகங்கள் அழிந்து விட கூடாது அதை நினைவுகூற வேண்டும் அந்த கலைஞர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த மேடை நாடக தினம் கொண்டாடபடுகிறது .

    உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை அனைத்து நடிகர்களும் ஆரம்ப காலத்தில் நாடக மேடையில் இருந்து வந்தவர்கள் தான். அதன் பின் ஏற்பட்ட வளர்ச்சி தான் நாடகங்களை மக்களிடம் இருந்து பிரித்து வைத்தது .

    இந்தியாவை பொருத்த வரையில் இன்றளவும் மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகங்கள் மிக பெரிய அளவில் கொண்டாடபட்டு வருகிறது. மேடை நாடக கலைஞர்களை அங்கு மக்கள் சினிமா பிரபலங்களுக்கு சமமான அளவில் கொண்டாடி வருகின்றனர் .

     Today is world theater day

    தமிழ் சினிமாவை பொருத்தவரையில் எம்.ஜி.ஆர். சிவாஜி துவங்கி பல முக்கிய நடிகர்கள் நாடகத்தின் மூலம் சினிமா பிரபலமானவர்கள். தற்போதும் கூட முக்கிய இடங்களில் சென்னையில் நாடகங்கள் சீரான இடைவெளியில் நடைபெற்று தான் வருகிறது.

    முக்கியமாக தமிழில் கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மஹேந்திரன் மற்றும் பாம்பே சாணக்கியா போன்றவர்கள் சமகாலத்தில் சிறந்து விளங்கியவர்கள். இதில் கடந்த வருடத்தில் கிரேஸி மோகனின் இழப்பு ஏற்று கொள்ள முடியாததாக இருந்தது .

     Today is world theater day

    மேடை நாடகங்கள் இன்று உலகம் முழுவதும் குறைந்திருந்தாலும் கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடகங்களின் பிறப்பிடம் என்று சொல்லபடும் ஊர்களில் இந்த கலையை மறக்காமல் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். இது நம் ஊரிலும் பெரிய முக்கிய நகரங்களில் நல்ல கலைஞர்களின் திறனால் நடைபெற்று வருகிறது.

    Recommended Video

    Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

    தற்போது கொரோனா பாதிப்பினால் வீட்டை விட்டு வெளியேவராமல் அனைவரும் இருக்கின்றனர். இந்நிலையில் பல நாடக கலைஞர்கள் தாடி மீசையை சரி செய்யாமல் மாறுபட்ட தோற்றத்தில் இருந்து வருகின்றனர். பல பிரபலங்களும் இந்த தோற்றத்துடன் தங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

    Read more about: cinema நாடகம்
    English summary
    World theatre day is being celebrated today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X