இசைராஜாவான கார்த்திக்ராஜாவுக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : இசைஞானி இளையராஜாவின் மகனும், யுவன்சங்கர் ராஜாவின் சகோதரருமான இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

KUMKI ASHVIN RAJA CHAT | காதலிக்காக கும்கி படம் | V-CONNECT | FILMIBEAT TAMIL

தன்னுடைய இசையின் மூலம் பல படங்களை வெற்றியடையச் செய்து வரும் கார்த்திக்ராஜா ரஜினிகாந்த், அஜித், விக்ரம் போன்ற பலரின் படங்களில் தனது இசையின் மூலம் மக்களின மனங்களை கவர்ந்தவர்.

ஜூன் 29ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகிறார். இசையால் நம் அனைவரையும் நனைய வைத்த கார்த்திக்ராஜாவிற்கு அவரின் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

1992ல் ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் படத்தின் மூலம் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்தார் கார்த்திக்ராஜா. பாண்டியன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்க "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்" என்ற ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார்.

பின்னணி இசை

பின்னணி இசை

இவ்வாறு இவர் இசையமைத்த முதல் பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு என்று உருவான நிலையில், அதை தொடர்ந்து விஜயகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பின்னணி இசை அமைத்தும், பல பாடல்களுக்கு மெட்டிசைத்தும் அனைவரையும் ரசிக்க வைத்து வந்தார்.

மாணிக்கம்

மாணிக்கம்

இவ்வாறு தொடர்ந்து பல படங்களின் பின்னணி இசைக்கும் ஒரு பாடலுக்கும் மட்டுமே இசை அமைத்து வந்த கார்த்திக்ராஜா ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் என்ற படத்தின் மூலம் முழு இசையமைப்பாளராக அவதாரமெடுத்து நம் அனைவரையும் தனது பாடல்களின் மூலம் மூழ்கடித்தார்.

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

அதன் பின் உல்லாசம், காதலா காதலா இவ்வாறு தனது ஒவ்வொரு படத்தின் மூலம் தனித்துவமான இசையை நமக்கு பரிசாக அளித்து வந்த கார்த்திக் ராஜாவிற்கு நடிகர் மாதவன் நடிப்பில் உருவான டும்டும்டும் படத்தில் இசை அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

தனது மெல்லிசையின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் கார்த்திக் ராஜா சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு, பகடி ஆட்டம், படைவீரன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் தற்போது பலராலும் வெற்றிக்கூட்டணி என்று அழைக்கப்படும் சீனுராமசாமி, விஜய் சேதுபதி என இருவரும் மீண்டும் இணையும் மாமனிதன் என்ற படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து கார்த்திக் ராஜாவும் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

மாமனிதன்

மாமனிதன்

சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், ஒரே இசைக் குடும்பத்தைச் சேர்ந்த 3 இசையமைப்பாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வரும் மாமனிதன் திரைப்படம் மிகுந்த ஆவலுடன் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

47வது பிறந்தநாள்

47வது பிறந்தநாள்

இசை குடும்பத்திலிருந்து வந்து நம் அனைவரையும் இசையால் இன்றுவரை மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். ஜூன் 29ஆம் தேதியான இன்று தனது 47வது பிறந்த நாளை கார்த்திக்ராஜாவிற்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் இவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X