For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்டேட் கன்ஃபார்ம்... திடீரென டிரெண்டாகும் மாநாடு... இன்னிக்கு அப்படி என்ன ஸ்பெஷல்

  |

  சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி உள்ள படம் மாநாடு. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாநாடு மாறி உள்ளது. இதில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

  எல்லா மத அடிப்படைவாதிகளும் இணையும் ஒரு புள்ளி பெண்ணடிமைத்தனம்.. தாலிபன்கள் குறித்து பிரபல இயக்குநர்!எல்லா மத அடிப்படைவாதிகளும் இணையும் ஒரு புள்ளி பெண்ணடிமைத்தனம்.. தாலிபன்கள் குறித்து பிரபல இயக்குநர்!

  வழக்கமான அரசியல் படமாக இல்லாமல் த்ரில்லர் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரேம்ஜி அமரன், கருணாகரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ஷுட்டிங், டப்பிங் உள்ளிட்ட வேலைகள் முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

  தள்ளி போகும் ரிலீஸ்

  தள்ளி போகும் ரிலீஸ்

  இந்த படம் அக்டோபர் மாதம், ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மே மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளி போய் கொண்டிருக்கிறது.

  அப்டேட் தந்த வெங்கட் பிரபு

  அப்டேட் தந்த வெங்கட் பிரபு

  இந்த படத்தின் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ஃபஸ்ட் சிங்கிள் டிராக் பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு செம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் தயார் செய்து விட்டதாகவும், விரைவில் வர உள்ளதாகவும் சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபு அப்டேட் வெளியிட்டார்.

  ஆகஸ்ட் 15 ல் எதுவுமே வரலியே

  ஆகஸ்ட் 15 ல் எதுவுமே வரலியே

  இதனால் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல் மாநாடு மற்றும் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலோ ஆகஸ்ட் 15 ல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

  இன்று அப்டேட் கன்ஃபார்ம்

  இன்று அப்டேட் கன்ஃபார்ம்

  அக்டோபரில் படம் ரிலீஸ் என்கிறார்கள். ஆனால் அடுத்த அப்டேட், படத்தின் டிரைலர், டீசர் என எதுவும் இதுவரை வெளியிடவில்லையே. ரிலீஸ் தேதி கூட உறுதியாக அறிவிக்கப்படவில்லையே என ரசிகர்கள் கேள்வி கேட்க துவங்கினர். அப்படி ஏங்கிய ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இன்று மாநாடு படத்தின் அடுத்த அப்டேட் அல்லது இரண்டாவது சிங்கிள் நிச்சயம் வெளியிடப்பட உள்ளது.

  இது தான் காரணமா

  இது தான் காரணமா

  அதற்கு காரணம் இன்று மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு மாநாடு டீம், திரைத்துறையினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு இன்று என்ன அப்டேட் வெளியிட போகிறீர்கள், டிரைலரை வெளியிடுங்கள் என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

  ஹீரோயினுக்கே போஸ்டர் வெளியீடு

  ஹீரோயினுக்கே போஸ்டர் வெளியீடு

  சமீப காலமாகவே ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் போன்றவர்களின் பிறந்தநாளில் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுவது தமிழ் சினிமாவில் ஃபேஷனாகி விட்டது. அப்படி பார்க்கும் போது சிம்பு பிறந்த நாளில் ஃபஸ்ட்லுக்கை படக்குழு வெளியிட்டது. ஹீரோயின் கல்யாணி பிறந்தநாள் அன்று கூட அவரின் கேரக்டர் பெயர் உடனான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

  STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
  டிரெண்டிங் ஆன மாநாடு

  டிரெண்டிங் ஆன மாநாடு

  இதனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் பிறந்தநாளில் நிச்சயம் ஏதாவது அப்டேட் வெளியிடப்படும் என சிம்பு ரசிகர்கள் நம்புகிறார்கள். இதை தெரிந்து கொண்டு தான் இன்று திடீரென மாநாடு ஹாஷ்டாக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. இதில் மாநாடு படம் பற்றிய தங்களின் எதிர்பார்ப்புக்களை பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  English summary
  Maanaadu hastag is trending in twitter because producer Suresh Kamatchi celebrates his birthday today. So fans belive that on this special day update will be revealed definetly.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X