»   »  வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்..அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு

வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்..அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் சில வாரங்களாக 2 அல்லது 3 படங்கள் மட்டுமே வெளியாகி வந்தன. இந்த வாரம் அந்த நிலை மாறியுள்ளது.

மாதத்தின் தொடக்க நாளான இன்று 'அப்பா', 'ஜாக்சன் துரை', 'பைசா', 'ஒரு மெல்லிய கோடு', 'வில்லாதி வில்லன் வீரப்பன்' என்று 5 தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.


இது தவிர 'தி லெஜன்ட் ஆப் டார்ஜான்', 'தி பர்ஜ் எலெக்ஷன் இயர்', 'தி பிஎப்ஜி' என 3 ஹாலிவுட் படங்களும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.


அப்பா

அப்பா

சமுத்திரக்கனி நடித்து இயக்கியிருக்கும் படம். கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் அவரே சொந்தமாகத் தயாரிக்கவும் செய்திருக்கிறார். சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி ராமையா, நமோ நாராயணன் நடித்துள்ளனர். கல்வித்துறை மற்றும் அப்பாக்கள் செய்யும் தவறுகளை இப்படத்தின் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார். சமுத்திரக்கனி நடிப்பு, இளையராஜா இசை இரண்டுமே அப்பாவுக்கு வலிமை சேர்த்துள்ளன. இன்று வெளியாகும் படங்களில் அப்பாவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.ரசிகர்களை இப்படம் கவருமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை

சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடித்திருக்கும் 'ஜாக்சன் துரை'யை தரணி தரண் இயக்கியிருக்கிறார். சிபிராஜுடன் இணைந்து பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர். பேய்ப்படங்களில் நம்பிக்கை இல்லாத சத்யராஜ் இப்படத்தில் முதன்முறையாக பேயாக நடித்திருப்பதும், 'பர்மா' புகழ் தரணி தரண் இயக்கியிருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் ஜாக்சன் துரை வரவேற்பைப் பெறுமா? பார்க்கலாம்.


ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

அர்ஜுன், மனிஷா கொய்ராலா, சீதா, ஷாம் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் 'ஒரு மெல்லிய கோடு'. ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் ஹிட்டடித்ததால் தமிழிலும் நம்பிக்கையுடன் படத்தை வெளியிட்டுள்ளனர். த்ரில்லர் பின்னணியில் உருவாகியிருக்கும் 'ஒரு மெல்லிய கோடு' தமிழில் ஹிட்டடிக்குமா? என்பது தெரியவில்லை.


பைசா

பைசா

குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருக்கும் படம் 'பைசா'. 'பசங்க' ஸ்ரீராம்-ஆரா நடித்திருக்கும் இப்படத்தை அப்துல் மஜீத் இயக்கியிருக்கிறார்.கான்பிடண்ட் பிலிம் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே.ட்ரீம் வேர்ல்ட் 'பைசா' படத்தை தயாரித்திருக்கிறது. பசங்க ஸ்ரீராம் முதன்முறையாக சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் 'பைசா' அவரின் ஹீரோ ஆசைக்கு கைகொடுத்தால் சரிதான்.


வில்லாதி வில்லன் வீரப்பன்

வில்லாதி வில்லன் வீரப்பன்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் படம் 'வில்லாதி வில்லன் வீரப்பன்'. ஏகப்பட்ட சர்ச்சை, வழக்குகளை சந்தித்து இப்படம் ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது. தமிழ் நடிகர்கள் இல்லாத இப்படம் தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெறுவது சந்தேகம்தான்


ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

மேலே சொன்ன படங்களுடன் 'தி லெஜன்ட் ஆப் டார்ஜான்', 'தி பர்ஜ் எலெக்ஷன் இயர்', 'தி பிஎப்ஜி' 3 என ஹாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பாக்ஸ் ஆபிஸில் ஹாலிவுட் படங்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. இந்த வாரமும் அந்த நிலை தொடருமா? இல்லை தமிழ்ப்படங்களை ரசிகர்கள் வெற்றிவாகை சூட வைப்பார்களா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.


English summary
Today Released Movies Listed Here - Villadhi Villain Veerappan, Oru Melliya Kodu, Appa, Paisaa and Jackson Durai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil