இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்துக் கூறிய திரைப்பிரபலங்கள்!

சென்னை : தனது மெல்லிய இசையின் மூலம் ரசிகர்களை தனது முதல் திரைப்படத்திலேயே கட்டிப்போட்ட பெருமையை கொண்டவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

இசையமைப்பாளர் பாடலாசிரியர் இயக்குனர் திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஜேம்ஸ் வசந்தன் வானவில் வாழ்க்கை, ஓ அந்த நாட்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவ்வாறு தனது இளமை கொஞ்சும் துடிப்பான இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வரும் இவர் அக்டோபர் 1ஆம் தேதியான தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகப் பிரபலங்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம்

இசையின் மீது அலாதி காதல் கொண்ட ஜேம்ஸ் வசந்தன் இன்றுவரை 400க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ பாடல்களுக்கு இசையமைத்து வந்ததை அடுத்து 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

விருதுகளை தட்டிச் சென்றார்

விருதுகளை தட்டிச் சென்றார்

இசை அமைத்த முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜேம்ஸ் வசந்தன் "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் அந்தாண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான பல்வேறு விருதுகளை தட்டிச் சென்றார்.

ஆலய மணியாக

ஆலய மணியாக

குறிப்பாக "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தில் வரும் "கண்கள் இரண்டால்" பாடல் இன்று வரை இளம் ரசிகர்களின் மனதில் ஆலய மணியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு இவரின் இசைக்கு ரசிகர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அதைத்தொடர்ந்து நாணயம், பசங்க, ஈசன், உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இசை அமைத்ததை தொடர்ந்து மலையாளத்தில் மம்முட்டி நடித்த "டபுள்" திரைப்படத்தின் மூலம் மலையாள திரைத்துறைக்கும் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஓ அந்த நாட்கள்

ஓ அந்த நாட்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிரபலமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன் வானவில் வாழ்க்கை, ஓ அந்த நாட்கள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

தொகுத்து வழங்கியுள்ளார்

தொகுத்து வழங்கியுள்ளார்

இவ்வாறு சிறந்த இசையமைப்பாளர், இயக்குனர், எழுத்தாளர் என பன் முகங்களைக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அக்டோபர் 1ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X