வித்தகக் கவிஞர் பா.விஜய்க்கு இன்று பிறந்த நாள்.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் என பலருக்கும் தனது இனிமையான வரிகளின் மூலம் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி உள்ளவர் பாடலாசிரியர் பா விஜய்.

கே பாக்யராஜ் நடித்த ஞானப்பழம் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பா விஜய் அதே சமயம் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை சிறந்த பாடலாசிரியராக பெற்றுள்ள பா. விஜய் அக்டோபர் 20ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஞானப்பழம்

ஞானப்பழம்

வானத்தைப்போல, ஆட்டோகிராப், உன்னாலே உன்னாலே, தூள், வெற்றிக்கொடி கட்டு, உன்னை நினைத்து, அன்பேசிவம் என எண்ணற்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் மெய் மறக்க வைக்கும் பாடல் வரிகளின் மூலம் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தவர் பாடலாசிரியர் பா விஜய்.

மறக்க முடியாத

மறக்க முடியாத

ரசிகர்களால் இன்றுவரை கொண்டாடப்பட்டு வரும் பாடல்களான எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, ஒவ்வொரு பூக்களுமே, கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு, கண் முன்னே எத்தனை நிலவு என மறக்க முடியாத பல பாடல்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

தேசிய விருது

தேசிய விருது

இவ்வாறு சிறந்த பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ஆட்டோகிராப் திரைப்படத்தில் வரும் "ஒவ்வொரு பூக்களுமே" பாடலை எழுதியதற்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

ஞாபகங்கள்

ஞாபகங்கள்

சிறந்த பாடலாசிரியராக மட்டுமல்லாமல் ஹீரோவாகும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் பா விஜய் ஞாபகங்கள், இளைஞன், ஸ்ட்ராபெரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ட்ராபெரி திரைப்படத்தில் மூலம் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.

தொலைக்காட்சி தொடர்கள்

தொலைக்காட்சி தொடர்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு முகங்களைக் கொண்டு இன்று வரை பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதி வரும் பா விஜய், கல்கி, செல்வி, அரசி, பாண்டவர் இல்லம், லக்ஷ்மிஸ்டோர்ஸ், வாணிராணி, பூவேஉனக்காக உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் பணியாற்றியுள்ளார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு தமிழ் சினிமாவில் இளம் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் பா.விஜய் அக்டோபர் 20ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X