twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கரு மேக மூட்டம்... இதமான சாரல்... மழையை ரசித்து வரவேற்ற ராதிகா சரத்குமார் !

    |

    சென்னை : ஒரு பக்கம் கடுமையான வெயில், ஒரு பக்கம் கொரோனா என மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    வீட்டுக்குள்ளையும் அனல் காற்று, வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் என மக்கள் தவித்து வந்தனர்.

    மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா மீண்டும் வீடியோ...மீண்டும் சர்ச்சை...விடாத கங்கனா

    சென்னையில் இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை மக்களுக்கு ஆறுதலாகவும், மனதுக்கு இதமாகவும் அமைந்துள்ளது.

    மேகமூட்டத்துடன் மழை

    மேகமூட்டத்துடன் மழை

    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    திடீர் மழை

    திடீர் மழை

    இந்த நிலையில், இன்று மாலை திடீரென கருமேகங்களுடன் வானம் இருண்ட நிலையில் திடீரென மழை கொட்டியது. எங்கு பார்த்தாலும் இருட்டாக காணப்பட்டது. இதனால் வீடுகளில் மாலை 4.30 மணிக்கே அனைவரும் மின்விளக்கை எரிய விட்டனர்.

    மழையால் மகிழ்ச்சி

    மழையால் மகிழ்ச்சி

    கொரோனாவின் தாக்கத்தால் வீடுகளுக்கு முடங்கி இருந்த மக்களுக்கு இந்த மழை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீட்டு மாடிகளிலும், ஜன்னல் வழியாகவும் அனைவரும் மழை ரசித்து வீடியோ எடுத்து தங்களது இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுக் கொண்டனர். மழை கொண்டாடி வருகின்றனர்.

    மழை, மழை

    மழை, மழை

    அந்த வகையில், நடிகை ராதிகா சரத்குமார், தனது கணவர் சரத்குமாருடன் காஃபி குடித்துக்கொண்டே மழையை ரசித்துள்ளார். இந்த நிகழ்வை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இன்றைய மகிழ்ச்சி, மழையை அனுபவித்தது என்று பதிவிட்டுள்ளார்.

    Read more about: radhika twitter post
    English summary
    Today’s happiness is enjoying the rain...Radhika Sarathkumar twitter post
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X