இன்று திருமணம் எனும் நிக்காஹ், இன்னார்க்கு இன்னாரென்று!
சென்னை: இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெஷலாக இரு படங்கள் வெளியாகின்றன. ஒன்று ஆஸ்கர் பிலிம்ஸின் திருமணம் எனும் நிக்காஹ், இன்னொன்று புதியவர்களின் முயற்சியில் வரும் இன்னார்க்கு இன்னாரென்று.
பொதுவாக வெள்ளிக் கிழமைகளில் நான்கைந்து படங்கள் வெளியாகிவிடும். ஆனால் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முக்கியமான மூன்று படங்கள் வெளியாவதால், இன்று இரண்டு படங்களோடு நிறுத்திக் கொண்டார்கள் போலிருக்கிறது.

திருமணம் எனும் நிக்காஹ்
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க, அனீஸ் இயக்கியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்தது. ஜெய் - நஸ்ரியா நடித்துள்ளனர். இந்து - முஸ்லிம் மதப் பழக்கங்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சற்று பரபரப்பைக் கிளப்பிய படம் இது.

எதிர்ப்பு
எதிர்ப்பார்த்த மாதிரியே ஒரு மதத்தின் சார்பில் எதிர்ப்பும் கிளம்பியது. இஸ்லாமிய மதத்தினர், இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத் தடையும் வாங்கினர்.

சிக்கல் தீர்ந்தது
பின்னர் எதிர்ப்பாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினர். அதன் பிறகு, எதிர்ப்பு நீங்க, தடையும் விலகி இன்று வெளியாகிவிட்டது. சில இடங்களில் நேற்றே இந்தப் படம் வெளியானது.

இன்னார்க்கு இன்னாரென்று
இன்று வெளியாகும் இன்னொரு படம் இன்னார்க்கு இன்னாரென்று. ஒருவகையில் இந்த இரண்டு படங்களுமே தலைப்பைப் பொருத்தவரை ஒரே அர்த்தம் கொண்டவைதான்!
ஆண்டாள் ரமேஷ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை நாயகம் தயாரித்துள்ளார். கணேசன், ஜானகி, கவிதா என புதுமுகங்களுடன் சந்தானபாரதி, விஜய் கிருஷ்ணராஜ், அனுமோகன் என முன்னாள் இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











