»   »  இன்று ஜிகினா, திகார், அழிச்சாட்டியம்...மற்றும் காலத்தால் அழியாத வீரபாண்டிய கட்டபொம்மன்!

இன்று ஜிகினா, திகார், அழிச்சாட்டியம்...மற்றும் காலத்தால் அழியாத வீரபாண்டிய கட்டபொம்மன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

அவை ஜிகினா, திகார், அழிச்சாட்டியம் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த காலத்தால் அழியாத வீரபாண்டிய கட்டபொம்மன்.


ஜிகினா

ஜிகினா

ஜிகினா படத்தை ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். விஜய் வசந்த் நடித்துள்ள இந்தப் படம் பேஸ்புக் சமாச்சாரங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்து. படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகப் பிரபலங்கள் பலரும் சிலாகித்துள்ள படம் இது.


திகார்

திகார்

பேரரசு இயக்கத்தில் நீண்ட நாட்களாக வெளிவரப்போவதாக அறிவிக்கப்பட்ட படம் திகார். இன்று வெளியாகியுள்ளது. இவற்றுடன் அழிச்சாட்டியம் என்ற பெயரில் யாருக்குமே தெரியாத ஒரு படமும் ரிலீசாகியுள்ளது.


வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்தப் படத்துக்கு அறிமுகம் தேவையில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் காலத்தால் அழியாக காவியம் வீரபாண்டிய கட்டபொம்மன். பிஆர் பந்துலு இயக்கி தயாரித்த படம். எகிப்து திரைப்பட விழாவில் விருதுகள் பெற்றது. அந்த விழாவில் பங்கேற்ற சிவாஜி கணேசனை ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோய் பார்த்தனர்.


டிஜிட்டலில்..

டிஜிட்டலில்..

இந்தப் படத்தை மீண்டும் டிஜிட்டலில் புதுப்பித்து மறுவெளியீடு செய்கிறார்கள். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.


English summary
Today there are 4 Tamil movies releasing this Friday including Jigina.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil