»   »  இன்றைய ரிலீஸ்: விஎஸ்ஓபி, வாலு... எது தேறும்?

இன்றைய ரிலீஸ்: விஎஸ்ஓபி, வாலு... எது தேறும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த வெள்ளிக்கிழமை இரண்டே படங்கள்தான் வெளியாகியுள்ளன. ஒன்று ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி). அடுத்தது சிம்பு நடித்த வாலு.

இரண்டு படங்களுக்குமே கிட்டத்தட்ட சம அளவு திரையரங்குகள் கிடைத்துள்ளன. இவற்றில் விஎஸ்ஓபி நகைச்சுவைப் படம் என்பதால் ஏற்கெனவே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. வாலு படம் எப்படி இருக்கும் என்ற ஐடியாவே இல்லை யாருக்கும். ஒருவிதத்தில் அதுவும் ஒரு ப்ளஸ்தான் படத்துக்கு.


வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

விஎஸ்ஓபி என வெளிப்படையாகவே படத்தின் கன்டென்ட்டை வெளிப்படுத்திவிட்டார் இயக்குநர். யெஸ்.. முழுக்க முழுக்க சரக்கும் சரக்கு சார்ந்த இடங்களும்தான் கதை நிகழிடம். ஆர்யாவுக்கு இணையாைக சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.


ராஜேஷ்

ராஜேஷ்

இயக்குநர் எம் ராஜேஷின் சினிமா வாழ்க்கையைத் தீர்மானிக்கும் படம். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளராக ஆர்யாவுக்கு இது முதல் படம். எனவே இந்த வெற்றி ராஜேஷ், ஆர்யா இருவருக்குமே மிக முக்கியம்.


வாலு

வாலு

வாலு படத்தின் கதை, காட்சி என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தப் படம் வெளியான கதை விலாவாரியாக எல்லாருக்கும் தெரியும். ரிலீசாக வாலு பட்ட பாடே, அந்தப் படத்துக்கு மெகா பப்ளிசிட்டியாகவும் அமைந்தது.


ஹன்சிகா

ஹன்சிகா

இந்தப் படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். நான்காண்டுகளுக்கு முன்பு இதில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் சிம்புவிடம் காதலில் விழுந்தார். விழுந்த வேகத்தில் சுதாரித்து எழுந்து, மீண்டும் முதல் நிலை நாயகியாகத் தொடர்கிறார்.


சந்தானம்

சந்தானம்

இந்தப் படத்திலும் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் (வேற என்ன.. சிம்புவுக்கு நண்பனாகத்தான்!). விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார்.


இரண்டும் தேறுமா.. தேறாதா... இன்னும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிறோம்!English summary
Today Friday there are two movies i.e, Vaasuvum Saravananum Onna Padichavanga and Vaalu releasing in theaters.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil