நடிகர் சாய் குமாருக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!

பெங்களூரு : தனது கனத்த குரலின் மூலம் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தும், பல படங்களில் நடித்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் நடிகர் சாய்குமார்.

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மிகப்பிரபலமான நடிகராக வலம் வரும் சாய்குமார் தமிழில் ஓரிரு படங்களில் நடித்தும் பல வேற்று மொழிப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு பரிமாணங்களில் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் நடிகர் சாய்குமார் ஜூலை 27 ஆம் தேதியான இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பல்வேறு ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கனத்த குரலின் மூலம்

கனத்த குரலின் மூலம்

பிரபல நடிகர்களான சுமன் மற்றும் ராஜசேகர் போன்றோருக்கு ஆஸ்தான பின்னணிக் குரல் கொடுப்பவரான நடிகர் மற்றும் பின்னணி குரல் கலைஞர் சாய்குமார் தனது கனத்த குரலின் மூலம் இன்று வரை தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல்வேறு ரசிகர்களை ரசிக்க வைத்துக்கொண்டு வருகிறார்.

போலீஸ் ஸ்டோரி

போலீஸ் ஸ்டோரி

தனது அப்பாவின் வழியில் பின்னணி குரல் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய சாய்குமார், பல்வேறு திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு வெளியான "போலீஸ் ஸ்டோரி" திரைப்படத்தில் அக்னி என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து பலரையும் மிரட்டி இருந்தார்.

பெரிய திருப்பம்

பெரிய திருப்பம்

போலீஸ் ஸ்டோரி கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு அங்கும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வசூலை வாரிக் குவித்து சாய்குமார் நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

மிரட்டும் வில்லன்

மிரட்டும் வில்லன்

தமிழில் விக்ரம் நடித்த காவல் கீதம் திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றிய சாய்குமார் பின் பல்வேறு திரைப்படங்களில் மிரட்டும் வில்லனாக வந்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி எடுத்திருந்தார்.

ரஜினிகாந்த்துக்கு குரல்

ரஜினிகாந்த்துக்கு குரல்

வேட்டிய மடிச்சு கட்டு, ஆதி, தெனாவெட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்த சாய்குமார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் வேற்று மொழியில் வெளியாகிய படங்களுக்கு தனது பின்னணி குரலை கொடுத்து அனைத்து மொழியினருக்கும் பரிச்சயமானவர்.

தனித்துவமான குரல்

தனித்துவமான குரல்

இவ்வாறு நடிப்பாக இருந்தாலும் சரி, பின்னணி குரல் கொடுப்பதாக இருந்தாலும் சரி தனது தனித்துவமான குரலின் மூலமும், அதிரவைக்கும் நடிப்பின் மூலம் இன்று வரை அனைவரையும் அசரவைத்த வரும் நடிகர் சாய்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஜூலை 27 ஆம் தேதியான இன்று இவர் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல திரைப்பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து கூறி வரும் வேளையில், இவரின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் கூறி கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X