Sekhar kammula birthday: இயக்குநர் சேகர் கம்முலா பிறந்தநாள்.. வெளியாகவுள்ள தனுஷ் பட அப்டேட்!

சென்னை: கடந்த மாதம் 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது தனுஷின் கேப்டன் மில்லர். இந்தப் படத்திற்கு ஏராளமான வரவேற்பும் நல்ல வசூலும் கிடைத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் தனுஷ், தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி நடித்துள்ளார். கூடுதலாக இந்தப் படத்தை அவர் தயாரித்தும் உள்ளார். படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இதனிடையே இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் முன்னதாக கமிட்டான டி51 படத்தின் சூட்டிங்கில் அவர் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் முதல் கட்ட சூட்டிங் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர்கள் தனுஷ் மற்றும் நாகார்ஜூனா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மும்பையின் தாராவி பகுதியில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இதில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Today Sekhar Kammula birthday and dhanushs D51 movie updates expected

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷின் அடுத்தடுத்தப் படங்களின் வெற்றி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த மாதத்தில் ரிலீசான கேப்டன் மில்லரும் தனுஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பீரியட் படமாக, சுதந்திர போராட்ட காலத்தை சொல்லும் படமாக வெளியானது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முன்னதாக முடித்திருந்த தனுஷ், தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கி முடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கினார். முற்றிலும் இளைஞர்களை கொண்டு ரொமாண்டிக் ஜானரில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் சரத்குமார் இருவரும் கேமியோ ரோல்களில் நடித்துள்ளனர். படத்தின் 70 சதவிகித சூட்டிங்கை நிறைவு செய்துள்ள தனுஷ், தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தன்னுடைய டி51 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இதன் முதல்கட்ட சூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தனுஷ் மற்றும் நாகார்ஜூனா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட்டன.

ஐதராபாத் விமானநிலையத்தில் தனுஷ்: இந்நிலையில் விரைவில் மும்பையின் தாராவி பகுதியில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இதில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஐதராபாத் விமானநிலையத்தில் தனுஷ் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தற்போதைய லுக்கை வெளிப்படுத்தியுள்ளன. தாடி, மீசை சகிதம் அவர் இந்த வீடியோவில் காணப்பட்ட நிலையில், இதுதான் இந்தப் படத்தில் அவரது லுக் என்பது வெளிப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தாராவி என்று பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சேகர் கம்முலா பிறந்தநாள்: இந்நிலையில் இன்றைய தினம் இயக்குநர் சேகர் கம்முலாவின் பிறந்தநாள். இதையொட்டி டி51 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் இணைந்துள்ள நிலையில், படத்தின் பின்னணி மற்றும் பாடல்கள் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X