'குரு' மணிரத்னத்தின் கடல், அவரது சிஷ்யனின் டேவிட் இன்று ரீலீஸ்!
சென்னை: விஸ்வரூபம் சர்ச்சையிலிருந்து மெல்ல வெளிவந்திருக்கிறது கோடம்பாக்கம்.
இன்று இரு புதிய படங்கள் பெரிய அளவில் வெளியாகின்றன. ஒன்று மணிரத்னத்தின் கடல். அடுத்து அவரது சிஷ்யன் பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள தமிழ் -இந்தி இருமொழிப் படம் டேவிட்.
இந்த இரண்டில் கடல் படத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம். வெறுத்துப் போகும் அளவுக்கு டீசர்கள்.

கார்த்திக் மகன் - ராதா மகள்
கடல் படத்தின் முதல் ஈர்ப்புக்குரிய விஷயமாக விளம்பரப்படுத்தப்பட்டது (மணிரத்னம் - சுகாசினியைப் பொருத்தவரை சுவாரஸ்யம் என்று எதையும் நம்மைச் சொல்ல விடமாட்டார்கள். அவர்களே சொல்லிக் கொள்வார்கள்!!). டீசர் என்ற பெயரில் ஒரு நாள் ஹீரோவின் முதுகு, அடுத்த நாள் கழுத்து என ஒருவாரம் அலப்பறை செய்தார்கள். இதோ போல ஹீரோயினுக்கும் அறிமுகப் படலம் நடந்தது.

சுட்ட கதை?
படத்தின் கதையும் ரொம்ப சாதாரணமாக, ஏற்கெனவே வந்த நீர்ப்பறவையின் சாயலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கதைக்குள் ஈழ அகதிகள் பிரச்சினையை மணிரத்னம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் என்ன அரசியல் வெடிக்கப் போகிறதோ!

விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களில்...
விஸ்வரூபத்துக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான அரங்குகளைத்தான் இப்போது கடல் படத்துக்குக் கொடுத்திருக்கிறார்களாம். அந்த வகையில் இந்தப் பிரச்சினையில் அதிகபட்ச நன்மை அடைந்திருப்பவர் மணிரத்னம்தான் எனலாம்,

டேவிட்
விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள முதல் தமிழ் - இந்திப் படம், அவருடன் ஜீவா இணைந்துள்ளார் என்பதைத் தவிர வேறு எந்த விவரமும் இந்தப் படம் குறித்து வெளியில் தெரியவில்லை.

மணிரத்னம் சிஷ்யர்
இந்தப் படத்தின் இயக்குநர் பிஜோய் நம்பியார், மணிரத்னத்தின் சிஷ்யர். ஏற்கெனவே சைத்தான் என்ற இந்திப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. அதுவே ஒரு ப்ளஸ்ஸாக அமையவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











