டாப் 5 சினிமா செய்திகள் - கவின் சொன்ன அட்வைஸ் முதல் ஆண்ட்ரியா எடுத்த ரிஸ்க்வரை
சென்னை: கல்லூரியில் பேசியபோது மாணவர்களுக்கு கவின் அட்வைஸ் செய்த வீடியோ ட்ரெண்டானது, மருதநாயகம் படம் பற்றி கமல்ஹாசன் பேசியது, மாஸ்க் படத்துக்காக தான் எடுத்திருக்கும் ரிஸ்க் பற்றி ஆண்ட்ரியா பேசியது என கோலிவுட்டில் இன்று சில விஷயங்கள் களைகட்டின. அப்படியான டாப் 5 சினிமா செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
கவின் செய்த அட்வைஸ்: வெற்றிமாறன், ஆண்ட்ரியா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்க் படம் நாளை வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி நடந்த ப்ரோமோஷனில் மாணவர்களிடம் பேசிய கவின், 'வெள்ளிக்கிழமை மாஸ்க் படம் ரிலீஸாகிறது. அன்றைய தினம் எல்லோரும் சமத்தாக கல்லூரிக்கு வந்து கடமையை செய்துவிட்டு சனி, ஞாயிறில் படம் பார்த்தால் போதுமானது' என அட்வைஸ் செய்த வீடியோ பயங்கரமாக ட்ரெண்டாகி அவருக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது.
ஆண்ட்ரியா எடுத்த ரிஸ்க்: பாடகி, நடிகை என இருந்த ஆண்ட்ரியா மாஸ்க் படத்தில் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக தனது வீட்டு பேரில் லோன் எடுத்து அந்தப் பணத்தைத்தான் இந்தப் படத்துக்காக பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கும் அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

மருதநாயகம் பற்றி கமல்: கமல்ஹாசனே இயக்கி 90களின் இறுதியில் நடிக்கவிருந்த படம்தான் மருதநாயகம். படத்தின் ஷூட்டிங் கொஞ்சம் நடந்து பிறகு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கோவா செல்வதற்காக இன்று விமான நிலையம் வந்த அவரிடம் அப்படம் குறித்து கேட்டதற்கு, 'தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் அந்தப் படமும் நடக்கும் என்பது எனது நம்பிக்கை' என சொல்லிவிட்டு சென்றார்.
ஜாய் கிரிஸில்டாவின் குசும்பு: மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா பஞ்சாயத்து இப்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது. டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டு இன்னமும் ரங்கராஜ் வராததால், ஜாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனது கணவரை யாராவது பார்த்தால் டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்கள். சோதனைக்கு வருவதாக சொல்லி 15 நாட்கள் ஆகிவிட்டன. இன்னமும் வரவில்லை' என்று குசும்போடு போஸ்ட் போட்டிருந்தார்.
இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்?: நடிகராக லவ் டுடே, டிராகன், டியூட் என வரிசையாக மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த பிரதீப் ரங்கநாதன், மீண்டும் படம் இயக்கி தானே ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இன்று கோலிவுட்டில் தகவல்கள் கசிந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











